அரங்கன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரங்கன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 பிப்ரவரி, 2012

ஸ்ரீரங்கம் ஏன்?

paravasudevarதிருவரங்க பரவாசுதேவன்

 

 

 

“ரிடயர் ஆன பிறகு எங்கே வாழ்க்கையை ஓட்டப் போறே?” நண்பன் என்னிடம் கேட்டான்.

“வேறே எங்கே, ஸ்ரீரங்கத்தில் தான்!” இது நான். அப்போது நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரத்தில்.
“ஸ்ரீரங்க ரொம்ப செலவு பிடிக்குமேய்யா?”
“இருந்துட்டு போகட்டுமே, யாருக்குச் சொத்து சேர்க்கப் போறோம்?”
“அது சரி,உனக்கு பிடுங்கல்னு யாரும் இல்லை"
“அதனாலே இல்லையா, கடைசி காலத்துலேயாவது அந்த ரங்கன் கால்லே விழுவோமே.
“ எங்கும்  சுத்தி ரங்கனச் சேர்” அப்பிடின்னு சொல்வாங்களே , அதனால ஸ்ரீரங்கத்திலே போய் செட்டில் ஆகலாம்னு இருக்கேன்"
மற்றொரு வீட்டில்,
“எங்க இப்பிடி பிடிவாதம் பிடிக்கிறீங்க? நமக்குத் தான் மேலூர் ரோட்லே வீடு இருக்கிறபோது அத வித்துட்டு சித்திரை வீதிலே போய் வீடு வாங்கனுன்னு சொல்றிங்க”
“உனக்கு என்ன தெரியும், பெருமாள் எப்பப் பார்த்தாலும் மேலூர்  ரோடுக்கு வருவாரா? சித்திரை வீதின்னா வாசல்லேயே பெருமாள்  புறப்பாடு பாக்கலாமில்லியா?”
இன்றொரு வீட்டில், “நல்ல வேலை கோவிலுக்குள்ளேயே வீடு கட்ட இன்னும் அனுமதி தரல்ல,  இல்லைன்னா அங்கதான் வீடு வாங்கன்னு சொல்லி என்னை ஹிம்சை பண்ணி இருப்பே,  நல்ல பொண்ணு நீ"  மனைவியைக் கடிந்து கொள்கிறான் கணவன்.
“அப்பா. உனக்கும் அம்மாவுக்கும் ஸ்ரீரங்கத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீடு பதிவு செய்துள்ளேன், சரிதானே", மகன் அமெரிக்காவில் இருந்து அப்பா, அம்மாவை கடைசி காலத்துக்கு மகிழ்ச்சியுடன் இருக்க, skypeஇல் கூறுகிறான். அவன் கவலை, “எங்கேயாவது அப்பா தன்னை அமெரிக்காவை விட்டு உடன் புறப்பட்டு வந்து விடு என்று சொல்லிவிடுவாரோ? “
என்ன இதெல்லாம்?  இதெல்லாம் தினந்தோறும் பல இடங்களில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி நடக்கும் உரையாடல்கள் தான்.

எல்லோருக்கும் ஆசை, தன்னுடைய வாழ்நாளில் கொஞ்ச நாட்களாவது ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கனாதனைத் தரிசிக்க வேண்டும் என்பது. ஸ்ரீரங்கத்து வீதிகளில், அது சித்திரை வீதியாகட்டும் அல்லது உத்தர வீதியாகட்டும் பல நாட்கள் பிரதக்ஷணம் வர வேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை. இங்கு ஆசார்யர்கள் செய்யும் உபன்யாசங்களில்  கலந்து கொள்ளவேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை!
நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனை ஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை ஆசார்யர்க்ளை ஈர்த்துள்ளது?
அப்படி என்னையா ஸ்ரீரங்கத்தில் இருக்கு? ன்னு நீங்க கேட்கிறது எனக்குத் தெரியுது.
என்ன இல்லை ஸ்ரீரங்கத்தில்
ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல்.அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இறுதி கொண்டு அனுபவிப்போம்.
“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி'
என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும். வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்),ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம்.  வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது?
ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்
"”இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
     புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேsம்பு காங்கம்
  யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”
என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார் என்றால் பாருங்கள்.ஆசைப்பட்டது எல்லாத்தையும் கொடுக்கும் இடம் ஸ்ரீரங்கம்.இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர்..
அப்படி என்னையா ஸ்ரீரங்கத்தில் இருக்கு? ன்னு நீங்க கேட்கிறது எனக்குத் தெரியுது.
என்ன இல்லை ஸ்ரீரங்கத்தில்!
ஸ்ரீரங்கம் 108 திவ்விய ஸ்தலங்களில் முதலாவது ஆகும்.  ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த வைஷ்ணவ ஆலயங்களை திவ்விய ஸ்தலங்கள் என்பர். பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.
ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்
   அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங்கோயில் 
      சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் திர்க்கும்கோயில்
திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!
என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்வாமி தேசிகன் குறிப்பிடுகிறார்.
.ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் மொத்தம் எட்டு.,அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் இவை.
தெற்கே வானமாமலை, தொண்டை நாட்டிலே ஸ்ரீமுஷ்ணம், தமிழ் நாட்டின் எல்லையில் திருவேங்கடம், ஸ்ரீரங்கம், வடநாட்டில் பதரிகாசரமம், சாலக்ராமம்,  ராஜஸ்தானில் புஷ்கரம், நைமிசராண்யம், என்பவை தான் அவை.  வானமாமலையில் எண்ணெய் விசேஷம். அங்கு திருமடப்பள்ளியில் வரமிளகாய் பயன்படுத்துவதில்லையாம்.
பகவான் காடு ரூபமாக உள்ளார் நைமிசாரண்யத்தில். தண்ணிர் ரூபத்தில் உள்ளார் புஷ்கரத்தில். ஸ்ரீமுஷ்ணத்தில் மூலஸ்தானத்தில் வராஹமுர்த்தி தனியே கோயில் கொண்டுள்ளார்.
இந்த ஸ்வயம்வ்யக்த ஷேத்ரங்களில்,  ஸ்ரீரங்கம் ஒன்றில் தான் பெருமாள் சயனக் கோலத்தில் உள்ளார். மற்ற இடங்களில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். ஆக ஸ்ரீரங்கத்திற்கு விசேஷம் சயனக்  கோலம்,
.ஆழ்வார்கள் பனிரெண்டு பேரும் எங்கே பிறந்தார்கள் பாருங்கள்.பொய்கை ஆழ்வார் காஞ்சியிலும், ,பூதத்தாழ்வார் மயிலாபூரிலும் பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லை  என்று ஆழ்வார்கள் எல்லோரும் வெவ்வேறு இடத்தில் பிறந்து இருந்தாலும்  சேர்ந்த இடம் ஸ்ரீரங்கம்.
எப்படிங்கிரிங்களா?
கணிதத்தில் சைபர் தெரியமா? அதுக்குத் தனியாளா என்ன மதிப்பு? ஒன்னும் கிடையாது.அதை எதாவது எண்ணுக்கு பின்னாலே போடுங்க, என்ன ஆறது பாருங்க,  மதிப்பு கூடுதில்ல.
அந்தக் காலத்திலே கோள்களைப் பத்தி,
பாரதத்திலே எவ்வளவு ஆராய்ச்சி செய்து இருக்காங்க,  ஆனா ஏதோ தாங்கத்தான் கண்டுபிடிச்சது போல சொல்லிக்கொண்டு இருக்காங்களே,
“பழி ஓரிடம், பாபம் ஓரிடம்" பழமொழி போல  ஆழ்வார்கள் வெவ்வேறு இடத்திலே பிறந்தாலும்
“அடியவர்கள் வாழ, அரங்கநகர் வாழ" என்று அரங்கனைத்தான் வாழ்த்தினார்கள்.
அப்படிப் பெருமை பெற்றது ஸ்ரீரங்கம்.
இது மட்டுமா?
“இவ்வளவு நேரம் ஆயிடுச்சு, சயனம் கொள்ளுகிற  நேரத்திலே எங்க கிளம்பிட்டிங்க” என்று அடியவர் திருமாலிருஜ் சோலை பெருமாளைப் பார்த்துக் கேட்கிறார்.
“இரும் அடியவரே, நாளைக் காலை தரிசனம் கொடுப்போம், பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்கிறோம்" ,என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அழகார்  மலை அழகன்.
அவர் மட்டுமா, திருவேங்கடத்தான்,
“எப்போது பொது சேவை முடியும்'
என்று அர்ச்சகரைப் பார்த்துக் கேட்கிறார்.
“ஏன் ஸ்வாமி" இது அர்ச்சகர்.
“பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்” என்கிறார், பெருமாள்.
விக்கித்து நிக்கிறார் அர்ச்சகர். இப்படி  எல்லா திவ்விய தேசத்து பெருமாளும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்களாம். நான் சொல்லவில்லை ஐயா, நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில்,
  “தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
            வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளுமிடத்தடி கொட்டிட
                   கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே”
என்று எல்லா  திவ்விய தேசத்து
எம்பெருமான்களும் பள்ளி  கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்கள் என்று  பாசுரத்தில் கூறுகிறார்
எத்தனை மகிமை ரங்கநாதனுக்கு!!`
                       renganathat in kalpagavirusham -                                   தொடருவோம் -----பகுதி- 2ல்

வியாழன், 8 செப்டம்பர், 2011

பெரியாழ்வார் அரங்கனைப் பற்றிய பாசுரங்கள்



பெரியாழ்வார் 
திருவில்லிப்புத்தூர் என்னும் பாண்டிய நாட்டில் முகந்த பட்டர்
என்னும் சோழிய பிராமனர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும்
பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது.
விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
இயல்பாகவே வாடா பெருங்கோவிலுடையானிடம் பக்தி கொண்டு இருந்தார்.அவருக்கு நந்தவனத்தில் இருந்து புஷ்பங்களைப் மாலையாகக் கட்டி பெருமானுக்குச் சாற்றுவதை  வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்தசமயத்தில் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு
நகர்வலம் வரும்போது  திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு
வழிபோக்கனைக்  கண்டான். அவனை எழுப்பி “நீ யார்?”  என்று கேட்டான்.
அந்தப் புதியவன் “ஐயா!  நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி
வருகிறேன்“ என்றான். மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும்
உண்டாகில் சொல்“ என்று கேட்டான். அவனும் “மழைக்காலத்தின்
தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில்,
முதுமையின் தேவையை இளமையில்,  மறுமையின் தேவையை
இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான். மன்னன்
மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவு நடந்தவை
சொல்லி “மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன?”  என்று கேட்டான்.

செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை
வைப்போம். சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி
அளிப்போம்“ என்றான். மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட
பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட
ஆணையிட்டான்.

ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய
எம்பெருமான் ஸ்ரீ வல்லபத்தேவன் அரசவையில் நடந்த விபரங்களைக்  கூறி
கிழியை அறுத்து வாவென்றார். இது இறைவன் ஆணை என மதுரைக்குப் புறப்பட்டார்.

மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது
அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர். அங்கிருந்த
மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன்
வரவேற்பதா?  என்று சலசலத்தனர். ஆழ்வாரும் உண்மையான பரம்பொருள்
திருமாலே என்றும் வைஷ்ணவமே முக்தியளிக்கும்  மதம் என வேதத்தை எடுத்து உவமானம் கூற பொற்கிழி தானாகவே வளைந்து கொடுத்தது.
ஆழ்வாரும் வேந்தரும் மாந்தரும் வியக்க விரைந்து கிழியறுத்தார்.

இது கண்ட மன்னனும், நம்பியும், மற்றுள்ள ஆன்றோரும், மக்களும்
அவரைப் பணிந்தனர். மன்னன் இவருக்கு பட்டர்பிரான் என்ற விருது
கொடுத்து யானை மேலேற்றி “வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன்
வந்தான்“ என்ற விருது ஊதச்செயது தானும் தன் பரிவாரங்களும்
உடன்வர நகர்வலம் வந்தான். இக்கோலகலத்தைக் காணுமாறு தன்
மக்களை அரசன் பணித்தபோது தன்னுடைய பக்தனின் மாட்சிமை காண
வந்தாற்போல் ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி, பிராட்டியருடன்,
தனக்குரிய ஆயுதங்கள் தரித்து, பிரம்மா ஆருத்ரன் மற்றும் இந்திரன்
முதலான தேவர்கள் துதிக்க காட்சி தந்தார். ஆழ்வார் எமபெருமானின்
கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாலும், அவர்
மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி, தான் அமர்ந்திருந்த
யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, “பல்லாண்டு
பல்லாண்டு பல்லாயிரமாண்டு பலகோடி நூறாயிரம்” என வாழ்த்தி
திருப்பல்லாண்டு பாடி அருளினார். மன்னன் மற்றுள்ள பக்தர்களையும்
தன்னோடு பாடச்செய்தார்.இந்த திவ்ய தேசத்தில் விளைந்த இப்பல்லாண்டு தான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்கு திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக  அமைந்து விட்டது. இவர் கண்ணனது திருஅவதாரச் செயல்களை போற்றி 44 திருமொழிகளாகப் பாடினார்.

இவற்றின் மொத்த பாசுரங்கள் 461 ஆகும். திருப்பல்லாண்டு பாசுரங்கள் 12 ஆகும்
மொத்தம் சேர்த்து 473 பாசுரங்கள். இவருடைய பாசுரங்கள்
பெரியாழ்வார் திருமொழி என்று அழைக்கப்பட்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதலில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் பாடிய தலங்கள்
1. திருவரங்கம்
2. திருவெள்ளறை
3. திருப்பேர்நகர்
4.கும்பகோணம்
5. திருக்கண்ணபுரம்
6. திருச்சித்திரக்கூடம்
7. திருமாலிருஞ்சோலை
8. திருக்கோட்டியூர்
9. திருவில்லிப்புத்தூர்
10. திருக்குறுங்குடி
11. திரு வேங்கடம்
12. அயோத்தி
13. சாளக்கிராமம்
14. பத்ரிநாத்
15. தேவப்ரயாகை
16. துவாரகை
17. மதுரா
18. ஆய்ப்பாடி
19. திருப்பாற்கடல்
20. பரமபதம்.



அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

பெரியாழ்வார் திருவரங்கனைப் பற்றி 35 பாடல்கள் பாடியுள்ளார்.
அவை திருமொழி, என்று பெயரில் வழங்கப்படுகிறது.
அவற்றை பின் வரும் பகுதிகளில் காணலாம்.

 முதல் பகுதி
திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்.

நாத முனிகள் அருளிச் செய்தது.

குருமுக மனதீத்ய ப்ராஹவேதான சேஷாந்
நரபதி பரக்லுப்தம் ஸுல்க மாதாது காம:!
ஸ்வஸுர மமரவந்த்யம்ரங்கனாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுலதிலகம்தம்  விஷ்ணுசித்தம்  நமாமி !!

பாண்டியப் பட்டர் அருளிச் செய்தது.

மின்னார் தடமதில்சூழ் வில்லிபுத்தூரென்று  ஒரு கால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம்* - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம்,* கீழ்மையினிற்சேரும் -
வழியறுத்தோம்  நெஞ்சமே ! வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று*
ஈண்டியசங்கம் எடுத்தூத*-- வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்*
பாதங்கள் யாமுடைய பற்று.
திருமொழி
1. கருவுடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்*
  உருவுடையாய்! உலகேழும்* உண்டாக வந்து பிறந்தாய்!*
  திருவுடையாள் மணவாளா!* திருவரங்கத்தே கிடந்தாய்!*
  மருவி மணம் கமழ்கின்ற* மல்லிகைப் பூச் சூட்டவாராய் . 2.7.2

2.சீமாலிகன் அவனோடு* தோழமை கொள்ளவும் வல்லாய்*
 சாமாறு அவனை நீ எண்ணிச்* சக்கரத்தால்த்தலைக்கொண்டாய் !*
 ஆமாரறியும் பிரானே! அணியரங்கத்தே கிடந்தாய்!*
 ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!* இருவாட்சிப் பூச் சூட்ட வாராய். 2.7.3

3.வண்டு களித்திருக்கும் பொழில்சூழ்
 வருபுனல் காவிரி தென்நரங்கன்
பண்டவன் செய்த கிரிடையெல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக்குனிக்க வல்லார்
கோவிந்தன் அடியார்களாகி என் திசைக்கும்  விளக்காகி நிற்பார்
இணையடி என் தலை மேலனவே                              

4.கண்ணி நன் மாமத்தில் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
 மன்னியசீர் மதுசுதனா! கேசவா!* பாவியேன்வாழுகந்து*
 உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்*
 என்னில் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம்தா. 3.3.2


தொடருவோம்