திங்கள், 12 மார்ச், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-4.


ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-4.

"ஏன் ஸ்வாமி வருத்தமாக உள்ளீர்? நானும் இரண்டு நாளாகப் பார்க்கிறேன்,எதேயோ  பறிகொடுத்தமாதிரி உள்ளிர்கள்?"
தாயார் வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைப் பார்த்துக் கேட்கிறார்.
"நேற்றைக்கு பூலோகம் சென்று இருந்தேன், அங்கு தீபாவளி சமயம். ஒரு வீட்டில்  நடந்த சம்பவம் என்னை பாதிtத் து விட்டது, அதனை நினைத்துத் தான் வருத்தமாக  உள்ளேன்" என்று நாராயணன் லட்சுமியைப் பார்த்துச் சொன்னார்.
"அப்படி என்ன அங்கு நடந்து விட்டது, நானும் தெரிந்து கொள்ளக்கூடாதா ஸ்வாமி?"
"தாராளமாகத் தெரிந்து கொள்".
"கேள்"
பூலோகத்தில் ஒருநாள்:
"ஏன் அம்மா, வருத்தமாக இருக்கே? எல்லாச் சாமான்களும் தான் தீபாவளிக்கு வாங்கி  போட்டுட்டேனே? இன்னும் ஏதாவது வேண்டுமானால் சொல்லு, அதையும் வாங்கிண்டு  வரேன்."
மூத்த பையன் தான் தாயிடம், அவள் வருத்தமாக இருப்பதைப் பார்த்து, வினவினான். தாய்க்கு மூன்று மகன்கள், இருவர் அவளோடு உள்ளார்கள், மூன்றாவது மகனுக்கு  கல்யாணமாகி அவன் தன் மனைவியுடன் அமெரிக்காவில் தற்போதுதான் சென்றுள்ளான், மூத்த மகன் கேட்டவுடன், "இப்போது வரதராஜன் என்ன செய்யரானோ? அவனுக்கு  தீபாவளின்னு தெரியுமோ இல்லையோ? அவன் மனைவிக்கு பட்சணம் எல்லாம் செய்யத்
தெரியுமோ தெரியாதோ? அவனும் நம்மோடு இருந்திருந்தால் நன்னா இருந்து இருக்கும். ஹும், அவனும் நம்மோடு இல்லையேன்னு தான் வருத்தமாக இருக்கு" என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்ற மருமகள்கள்,
"குத்துக்கல்லாட்டம் நாம ரெண்டு பேர் இங்க இருக்கோம், நம்மளைப் பத்திக் கவலைபடாம, அம்மா இருக்காளா, இல்லையான்னு இதுநாள் வரை கவலைப் படாத வரதராஜனையும்  அவன் பெண்டாட்டியைப் பத்தி கவலைப்படுதே இந்தக் கிழம்" ன்னு  அந்த இரண்டு மருமகள்களும் மாமியாருக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள், 
அதே நினைச்சேன், நாம அப்படி கவலைபடாம இருக்கோமேன்னு வருத்தமாக இருக்கு"  பூலோகத்தில் நடந்த, பார்த்த கதையை லட்சுமியிடம் விவரித்தார்,  நாராயணன்.
"அதற்கும் நீங்கள் வருத்தப் படுவதற்கும் என்ன ஸ்வாமி உள்ளது?'
லக்ஷ்மி ஒண்ணும் புரியாமல் வினவினாள்.
"என்ன அப்படிச் சொல்லிட்ட?  நாம் வைகுந்த்தத்தில் சௌக்கியமா இருக்கோம்,  பூலோகத்தில் எத்தனை பேர் கஷ்டப் படறாங்க? அவங்களும் வைகுந்தத்திற்கு வர  வேண்டாமா? அவர்களும் நம்மோடு இருந்தால், அந்தத் தாயாரைப் போல நாமும்  மகிழ்ச்சியாக இருக்கலாமே? அதுக்குத் தான் வருத்தப் பட்டேன்" ன்னு நாராயணன்
லட்சுமியிடம் தான் வருத்தத்தை கொட்டினான்.
"நீங்க சொல்றது சரிதான். அதுக்கு இப்ப என்ன செய்ய உத்தேசம்?"
"நாம பூலோகத்துக்கு போயிட்டா?"  நாராயணன் பதில் சொன்னான்.
"நாம பூலோகத்துலே எந்த இடத்துக்கு போவது?"
"தொண்டரடிப்பொடி ஆழ்வார் மூணாவது விபுதி வேணும்ன்னு சொன்னாரில்லே, அந்தத் திருவரங்கம் போயிடுவோம், அங்கிருந்து கொண்டு எல்லோரையும் திருத்தி  வைகுந்தம் அனுப்பிடுவோம். திருமங்கை ஆழ்வார் அர்ச்சாவதாரம் பற்றி நிறையப்  பாடியுள்ளார், அதனாலே 106 திவ்ய தேசங்கள் தோறும் இருந்து பக்தர்களைத்  திருத்தி வைகுந்தம் அனுப்பிடுவோம். "வைகுந்தம் புகுவது மன்னவர் விதி?"
அதனால் எல்லோரையும் திருத்தி இங்கு அனுப்பிடுவோம். கிளம்ப தயாராக இரு"
என்று நாராயணன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தான்.
ஆக ஸ்ரீரங்கம் மூணாவது விபுதி ஆனது. ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரங்கால் மண்டபம் மற்றொரு பகுதி
அதுக்கு ஏற்றாற்போல் ஸ்ரீரங்கத்தில் ஆயிரம் கால் மண்டபத்தில் நித்ய விபுதி, லீலா விபுதி  மாதிரி, வைகுந்த ஏகாதசியின் போது உண்டாக்குகிறார்கள். ஆயிரக்கால் மண்டபத்தில்,  953 கல் தூண்கள்( ஒவ்வொன்றும் 19 அடி உயரம் கொண்டவை) திருமாமணி மண்டபத்தைச் சுற்றி நித்ய விபுதியாகவும், ஒவ்வொரு ஆண்டும் 47 மரத்தூண்கள் ( ஆக மொத்தம்  1000 தூண்கள்) வெளியே போடற கொட்டகை லீலா விபுதி எனவும் மாறுகிறது.
திருமாமணி மண்டபத்தில் ராபத்து உத்சவத்தின் போது  அரையர் பண் இசைத்து பாடி  வைகுந்தத்தில் உள்ளது போல நடைபெறுகிறது.
என்ன, ஸ்ரீரங்கம் வைகுந்தம் இல்லையா?
உடனே புறப்படுங்கள் வைகுந்தத்திற்கு!!!
ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து திரட்டியவை


ஞாயிறு, 4 மார்ச், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3

"நல்லார்கள் வாழும் நளிரங்கம்"- என்று ஆழ்வார்கள் ஸ்ரீரங்கத்தைப் பற்றி பாசுரங்கள் இயற்றியுள்ளனர்.
"மற்ற ஊர்களில் இல்லாத சிறப்பு என்னய்யா ஸ்ரீரங்கத்தில் உள்ளது?"
என்ற கேள்விக்கு முன்னரே இரு பகுதிகளில் விளக்கி உள்ளோம். அதன் தொடர்ச்சியாக இங்கு மேலும் ஸ்ரீரங்கத்தின் மேன்மையைப் பார்ப்போம்.
கோயில், திருமலை, காஞ்சி, திருநாராயணபுரம் என்று நான்கு ஊர்களைச் சொல்லுவார்கள்.
கோயில் என்றால் ஸ்ரீரங்கத்தைத் தான் குறிக்கும்.இது போக மண்டபம் என்பார்கள்.
அதே போல, புஷ்ப மண்டபம் திருமலை ஆகும். அதனால் தான் திருமலையில் தோமாலா சேவை பிரசித்தி பெற்றது. தியாக மண்டபம் என்று பெயர் பெற்றது
காஞ்சி வரதர். எல்லா முக்கியமான ஆழ்வார்கள், ஆசாரியகள் பிறந்தது காஞ்சியில். ஆனால் கடைசியில் சேர்ந்தது ஸ்ரீரங்கத்தில். அதனால் காஞ்சி தியாக மண்டபம் ஆயிற்று.
 திருநாராயணபுரம் என்று  சொல்லப்படும் மேல்கோட்டை ஞான மண்டபம் என்பார்கள்.
ஆக எல்லாவற்றிலும் முதலாக உள்ளது ஸ்ரீரங்கம் ஆகும்.
108 திவ்ய ஷேத்ரங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். அதனை வளர்த்தால் எல்லா ஷேத்ரங்களையும் வளர்த்தது போல் ஆகும்.அதனாலும் இது முதன்மை பெற்று விளங்குகிறது.

"டாக்டர், ரெண்டு நாளா உடல் நலமில்லாமல் உள்ளது" நான் டாக்டரிடம் போனேன்.
"சோதித்துப் பார்த்து விடுவோம்" என்று டாக்டர் எல்லா சோதனைகளையும் செய்தார்.
"இத்தனை பரிசோதனைகள் செய்ய வேண்டுமா டாக்டர்?"
"நீங்க டாக்டரா, நான் டாக்டரா?"
"அதுக்கில்லை டாக்டர்" ன்னு நான் இழுத்தேன்.
"நீங்கள் எங்கு உள்ளீர்கள்" இது டாக்டர்.
"நான் ஸ்ரீரங்கத்தில் உள்ளேன்,டாக்டர்"
"உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது, சக்கரை வியாதியும் உள்ளது" ன்னு
ஒண்ணொண்ணா ஆரம்பித்தார்.
நான் மூர்ச்சை ஆகாத குறை.
"கவலைப்படாதிர்கள், இதுக்கெல்லாம் நான் சொல்றதை கவனமாகச் செய்தால் வியாதியை  சுலபமாகப் போக்கிடலாம்"
"சொல்லுங்க, டாக்டர்"
"ஒண்ணுமில்லை. தினமும் காலை மாலை நிறைய நடக்கணும். ஸ்ரீரங்கத்து சித்திரை  வீதியை ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்க போறும், நான் கொடுக்கிற மாத்திரையை விடாம  சாப்பிடுங்க'".
ஆம், ஸ்ரீரங்கம் பெரிய கோயில் என்பதால் வீதிகளும் பெரிது தான்.
ஸ்ரீரங்கம் சித்திரை மற்றும் உத்திரை வீதிகள், எட்டையும் ஒரு தடவை சத்தி வந்தால் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்  ஆகுமாம். அப்பறம் எந்த வியாதியும் நில்லாமல்  போய் விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

பிள்ளையாருக்கும், முருகனுக்கும் மாம்பழத்தைப் பெற சிவபெருமான் ஒரு போட்டி நடத்தினார். யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் இந்தப் பழம் என்கிறார்.

முருகன் தனது மயில் வாகனத்தை எடுத்துக் கொண்டு வலம்
வரக் கிளம்புகிறான். புத்திசாலியான பிள்ளையார் நாரதரிடம் கேக்கிறான்,
"உலகம் என்பது என்ன? அம்மை அப்பன் என்பது என்ன?"
"அம்மை அப்பன் என்பதும், உலகம் என்பதும் ஒன்று தான்" என்று நாரதர் கூற,
அம்மை அப்பனனி ஒரு தடவை சுற்றி வந்து தந்தையிடமிருந்து பழத்தைப் பெற்றதைப்  பார்த்த, முருகனுக்கு, கோபம் வந்து பழனி மலைக்குச் செல்கிறான் என்பது நமக்குத்  தெரிந்த கதை தான்.
அது போல ஸ்ரீரங்கம் ஏழு மதில்களைக் கொண்டதால், அதனை பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம், மஹர்லோகம்,ஜநோலோகம், தபோலோகம், ஸத்யலோகம்  என ஏழு  லோகங்களை அடக்கியது என்றும் சொல்லலாம்.
அதனால் ஏழு லோகங்களில் வாழ்ந்த பெருமை ஸ்ரீரங்கத்தில் கிடைக்கும்.
முன்னரே சொல்லியபடி, தொண்டரடிப் ஆழ்வார் தன்னுடைய திருமாலையில், நாம்
"நாம் யாரை வணங்குவது"
என்ற சந்தேகத்திற்கு,
 "சிலையினால் செற்ற தேவனே தேவன் ஆவான்"
என்று,
"யார் அந்த இலங்கை மன்னன் ராவணனை வென்றானோ, அந்த ராமனை வணங்கு"
என ராமனை வணங்கச் சொன்னார். நாம் உடனே,
"ராமன் வாழ்ந்தது  த்ரேதா யுகம், ஆனால் நாம் இருப்பதோ கலியுகம்"
என்றோம்.
"அப்படியா சரி, "கற்றினம் மேய்த்த எந்தைக் கழலிணை பணிமிநீரே"
என்று மாடு மேய்ப்பவனாக, வெண்ணெய் திருடும் சாதாரணமான கண்ணன்
திருவடிகளைப் பற்றுங்கள்"
என்று கண்ணனை பற்றச் சொன்னார்.
நாம் உடனே " இதிலும் குறை உள்ளதே, கண்ணனும் கலியுகத்தில் இல்லையே?
அவனும் துவாபரயுகத்தில் வாழ்ந்தவன் தானே? என்றோம்.
ஆழ்வாரும் உடனே,
" நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
 காட்டினான் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம்"
என்று எல்லா விபவாவதாரங்களுக்கும் பிரதிநிதியாக, எல்லா
அர்ச்சாவதார திவ்ய தேசங்களுக்கும் பிரதிநிதியாக ரங்கநாதன் சேவை
சாதிக்கிறான், அவன் திருவடிகளைப் பற்றுங்கள்"
என்று அரங்கனைக் காட்டினார்.
ஆக,
"அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ!
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ!!
கடல் சூழ்ந்த மன்னுலுகம் வாழ!
மணவாள மாமுனியே இன்னும் ஒரு
நூற்றாண்டு இரும்!!!."
என்று கூற்று  சரிதானே!

ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்
ஸ்வாமி தேசிகன்

"ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்!
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்!
தோலாத தனிவீரன் தொழுத கோயில்!
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்!
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்!
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்!
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்!
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே!

கருத்து:
ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டது

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-2

தொண்டரடிப்டி ஆழ்வார்
 ஸ்ரீரங்கம் ஏன்?  தொடர்கிறது:
தொண்டரடிப் பொடியாழ்வார் பெருமானிடம் வேண்டுகிறார்.,தன் திருமாலையில்
பெருமானே! மனிசர் வாழ்வு நிலையில்லாதது. ஒருவர் நூறு வயது வாழ்வதாகக் கொண்டாலும்,அதில் பாதி ஆயுள், அதாவது ஐம்பது ஆண்டுகள் தூக்கத்திலேயே போய் விடுகிறது. மீதி ஆண்டுகளில் பசி, பிணி, மூப்பு, பாலகன் என்று போய் விடுகிறது ஆதலால் எனக்கு இந்த லீலா விபுதி வேண்டாம் ஸ்வாமி.
வேத நூல்பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே!
பெருமான்:அதுவும் சரிதான், லீலா விபுதி  அழியக்ககூடியது. அப்ப உன்னை
                       நான்   மற்றும் நித்ய   ஸூரிகள் வாசம் செய்யும்  நித்ய  விபுதிக்கு 
                      அழைத்துச் சென்று விடவா?
ஆழ்வார்::பசுமையான மலைபோன்ற மேனியைக்   கொண்ட, பவளத்தைப்
                    போல உன் வாய்  என்ற அமுதத்தை விட்டு, நீ சொல்கின்ற
                  அந்த நித்ய விபூதியில் என்ன இருக்கிறது   என்று என்னை அங்கே 
                  அழைத்துச்  செல்கிறேன் என்கிறாயே?
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!

பெருமான்: ஏன் ஆழ்வாரே, லீலா விபூதியும்   வேண்டாம், நித்ய விபூதியும்
                       வேண்டாம்  என்கிறீர்.  பின் எங்குதான் வாசம்  செய்வதாக
                        உத்தேசம்?  மொத்தமே  ரெண்டு விபுதிதானே உள்ளது.
                      “வைகுந்தம்  அடைவது மன்னவர் விதி"
                      என்று உமக்குத்  தெரியாதா? எல்லா மனிசர்களும் பாப   
                       புண்ணியங்களைத்  தொலைத்துவிட்டு  அவர்களை
                      இங்குதானே நான் அழைத்துக்  கொள்கிறேன். பின் எங்குதான்
                       வாசம்  செய்வதாக உத்தேசம்?
ஆழ்வார்: நான் தான் என்னுடைய பாசுரங்களில்  சொல்கிறேனே? அந்த
                    இடத்திலேயே  எனக்கு ஒரு இடம் தரக்கூடாதா?
பெருமான்: எனக்குத் தெரியாமல் மூன்றாவது  விபுதியா? எனக்கே 
                     தெரியாமல்  ஒரு  இடமா?
ஆழ்வார்: பாசுரங்களின் முடிவில் “அரங்கமா   நகருளானே" என்று
                     பாடினேனே, எனவே  எந்த அரங்கன் இருக்கும் இடமோ
                   அந்த  மூன்றாவது விபூதியில் எனக்கு  ஒரு இடம் கொடுத்து
                   விடு.  அதுதான் “பூலோக வைகுந்தம்” : அந்த  இடத்தில் 
                  இருந்துகொண்டு அரங்கனைப்  பற்றி பாடிக்கொண்டு  காலத்தை
                  ஒட்டுகிறேன்.
பெருமான்: ஆஹா!  நல்ல காரியம் செய்தீர்!   இப்போதே ஸ்ரீரங்கத்தை
                   மூன்றாவது  விபுதி என்று உலகத்துக்கு அறிவித்து
                    விடுவோம்.
இப்படியாக ஸ்ரீரங்கம் மூன்றாவது விபுதியானது.
எப்படி ஸ்ரீரங்கமும் வைகுந்தமும் ஒன்றாகும்.. ஆகும்!
“காவேரி விரஜா சேயம் வைகுந்தம் ரெங்க மந்திரம்
ஸ: வாசுதேவோ ரங்கேசய: ப்ரத்யட்சம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மகாத்புதம்
ஸீ ரங்கசாயீ பகவான் ப்ரண வார்த்த ப்ரகாசக:”
           அதைத்தான் மேலே உள்ள பாடல் விளக்குகிறது. லீலா விபுதி அடைவதற்கு முன்னால் விரஜா நதியைக் கடக்க வேண்டுமாம். அதற்குச் சமமானது இங்குள்ள உபயகாவேரின்னு சொல்ற காவேரி மற்றும் கொள்ளிடம். அவைதான் எல்லைகோடுகள்.
வைகுந்தம் ரெங்க மந்திரம் என்பது வைகுந்தத்தைக் குறிக்கிறது.அதற்கு சமமாக ஏழு பிரகாரங்கள் கொண்ட “கோயில்" என்று குறிப்பிடப்படும் ஸ்ரீரங்கம்.ஸ: வாசுதேவ: ரெங்கசய  என்ற வைகுண்ட வாசன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் தான், வேறுயாருமல்ல.
ப்ரத்யக்ஷம் பரமம் பதம் என்ற வார்த்தை ரங்கநாதன் தான் வைகுந்தவாசன் என்று குறிக்கிறது.
தொடரும்: பகுதி  3ல் 
ஸ்ரீ உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டது

சனி, 11 பிப்ரவரி, 2012

ஸ்ரீரங்கம் ஏன்?

paravasudevarதிருவரங்க பரவாசுதேவன்

 

 

 

“ரிடயர் ஆன பிறகு எங்கே வாழ்க்கையை ஓட்டப் போறே?” நண்பன் என்னிடம் கேட்டான்.

“வேறே எங்கே, ஸ்ரீரங்கத்தில் தான்!” இது நான். அப்போது நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரத்தில்.
“ஸ்ரீரங்க ரொம்ப செலவு பிடிக்குமேய்யா?”
“இருந்துட்டு போகட்டுமே, யாருக்குச் சொத்து சேர்க்கப் போறோம்?”
“அது சரி,உனக்கு பிடுங்கல்னு யாரும் இல்லை"
“அதனாலே இல்லையா, கடைசி காலத்துலேயாவது அந்த ரங்கன் கால்லே விழுவோமே.
“ எங்கும்  சுத்தி ரங்கனச் சேர்” அப்பிடின்னு சொல்வாங்களே , அதனால ஸ்ரீரங்கத்திலே போய் செட்டில் ஆகலாம்னு இருக்கேன்"
மற்றொரு வீட்டில்,
“எங்க இப்பிடி பிடிவாதம் பிடிக்கிறீங்க? நமக்குத் தான் மேலூர் ரோட்லே வீடு இருக்கிறபோது அத வித்துட்டு சித்திரை வீதிலே போய் வீடு வாங்கனுன்னு சொல்றிங்க”
“உனக்கு என்ன தெரியும், பெருமாள் எப்பப் பார்த்தாலும் மேலூர்  ரோடுக்கு வருவாரா? சித்திரை வீதின்னா வாசல்லேயே பெருமாள்  புறப்பாடு பாக்கலாமில்லியா?”
இன்றொரு வீட்டில், “நல்ல வேலை கோவிலுக்குள்ளேயே வீடு கட்ட இன்னும் அனுமதி தரல்ல,  இல்லைன்னா அங்கதான் வீடு வாங்கன்னு சொல்லி என்னை ஹிம்சை பண்ணி இருப்பே,  நல்ல பொண்ணு நீ"  மனைவியைக் கடிந்து கொள்கிறான் கணவன்.
“அப்பா. உனக்கும் அம்மாவுக்கும் ஸ்ரீரங்கத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீடு பதிவு செய்துள்ளேன், சரிதானே", மகன் அமெரிக்காவில் இருந்து அப்பா, அம்மாவை கடைசி காலத்துக்கு மகிழ்ச்சியுடன் இருக்க, skypeஇல் கூறுகிறான். அவன் கவலை, “எங்கேயாவது அப்பா தன்னை அமெரிக்காவை விட்டு உடன் புறப்பட்டு வந்து விடு என்று சொல்லிவிடுவாரோ? “
என்ன இதெல்லாம்?  இதெல்லாம் தினந்தோறும் பல இடங்களில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி நடக்கும் உரையாடல்கள் தான்.

எல்லோருக்கும் ஆசை, தன்னுடைய வாழ்நாளில் கொஞ்ச நாட்களாவது ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கனாதனைத் தரிசிக்க வேண்டும் என்பது. ஸ்ரீரங்கத்து வீதிகளில், அது சித்திரை வீதியாகட்டும் அல்லது உத்தர வீதியாகட்டும் பல நாட்கள் பிரதக்ஷணம் வர வேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை. இங்கு ஆசார்யர்கள் செய்யும் உபன்யாசங்களில்  கலந்து கொள்ளவேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை!
நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனை ஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை ஆசார்யர்க்ளை ஈர்த்துள்ளது?
அப்படி என்னையா ஸ்ரீரங்கத்தில் இருக்கு? ன்னு நீங்க கேட்கிறது எனக்குத் தெரியுது.
என்ன இல்லை ஸ்ரீரங்கத்தில்
ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல்.அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இறுதி கொண்டு அனுபவிப்போம்.
“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி'
என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும். வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்),ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம்.  வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது?
ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்
"”இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
     புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேsம்பு காங்கம்
  யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”
என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார் என்றால் பாருங்கள்.ஆசைப்பட்டது எல்லாத்தையும் கொடுக்கும் இடம் ஸ்ரீரங்கம்.இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர்..
அப்படி என்னையா ஸ்ரீரங்கத்தில் இருக்கு? ன்னு நீங்க கேட்கிறது எனக்குத் தெரியுது.
என்ன இல்லை ஸ்ரீரங்கத்தில்!
ஸ்ரீரங்கம் 108 திவ்விய ஸ்தலங்களில் முதலாவது ஆகும்.  ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த வைஷ்ணவ ஆலயங்களை திவ்விய ஸ்தலங்கள் என்பர். பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.
ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்
   அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங்கோயில் 
      சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் திர்க்கும்கோயில்
திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!
என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்வாமி தேசிகன் குறிப்பிடுகிறார்.
.ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் மொத்தம் எட்டு.,அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் இவை.
தெற்கே வானமாமலை, தொண்டை நாட்டிலே ஸ்ரீமுஷ்ணம், தமிழ் நாட்டின் எல்லையில் திருவேங்கடம், ஸ்ரீரங்கம், வடநாட்டில் பதரிகாசரமம், சாலக்ராமம்,  ராஜஸ்தானில் புஷ்கரம், நைமிசராண்யம், என்பவை தான் அவை.  வானமாமலையில் எண்ணெய் விசேஷம். அங்கு திருமடப்பள்ளியில் வரமிளகாய் பயன்படுத்துவதில்லையாம்.
பகவான் காடு ரூபமாக உள்ளார் நைமிசாரண்யத்தில். தண்ணிர் ரூபத்தில் உள்ளார் புஷ்கரத்தில். ஸ்ரீமுஷ்ணத்தில் மூலஸ்தானத்தில் வராஹமுர்த்தி தனியே கோயில் கொண்டுள்ளார்.
இந்த ஸ்வயம்வ்யக்த ஷேத்ரங்களில்,  ஸ்ரீரங்கம் ஒன்றில் தான் பெருமாள் சயனக் கோலத்தில் உள்ளார். மற்ற இடங்களில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். ஆக ஸ்ரீரங்கத்திற்கு விசேஷம் சயனக்  கோலம்,
.ஆழ்வார்கள் பனிரெண்டு பேரும் எங்கே பிறந்தார்கள் பாருங்கள்.பொய்கை ஆழ்வார் காஞ்சியிலும், ,பூதத்தாழ்வார் மயிலாபூரிலும் பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லை  என்று ஆழ்வார்கள் எல்லோரும் வெவ்வேறு இடத்தில் பிறந்து இருந்தாலும்  சேர்ந்த இடம் ஸ்ரீரங்கம்.
எப்படிங்கிரிங்களா?
கணிதத்தில் சைபர் தெரியமா? அதுக்குத் தனியாளா என்ன மதிப்பு? ஒன்னும் கிடையாது.அதை எதாவது எண்ணுக்கு பின்னாலே போடுங்க, என்ன ஆறது பாருங்க,  மதிப்பு கூடுதில்ல.
அந்தக் காலத்திலே கோள்களைப் பத்தி,
பாரதத்திலே எவ்வளவு ஆராய்ச்சி செய்து இருக்காங்க,  ஆனா ஏதோ தாங்கத்தான் கண்டுபிடிச்சது போல சொல்லிக்கொண்டு இருக்காங்களே,
“பழி ஓரிடம், பாபம் ஓரிடம்" பழமொழி போல  ஆழ்வார்கள் வெவ்வேறு இடத்திலே பிறந்தாலும்
“அடியவர்கள் வாழ, அரங்கநகர் வாழ" என்று அரங்கனைத்தான் வாழ்த்தினார்கள்.
அப்படிப் பெருமை பெற்றது ஸ்ரீரங்கம்.
இது மட்டுமா?
“இவ்வளவு நேரம் ஆயிடுச்சு, சயனம் கொள்ளுகிற  நேரத்திலே எங்க கிளம்பிட்டிங்க” என்று அடியவர் திருமாலிருஜ் சோலை பெருமாளைப் பார்த்துக் கேட்கிறார்.
“இரும் அடியவரே, நாளைக் காலை தரிசனம் கொடுப்போம், பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்கிறோம்" ,என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அழகார்  மலை அழகன்.
அவர் மட்டுமா, திருவேங்கடத்தான்,
“எப்போது பொது சேவை முடியும்'
என்று அர்ச்சகரைப் பார்த்துக் கேட்கிறார்.
“ஏன் ஸ்வாமி" இது அர்ச்சகர்.
“பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்” என்கிறார், பெருமாள்.
விக்கித்து நிக்கிறார் அர்ச்சகர். இப்படி  எல்லா திவ்விய தேசத்து பெருமாளும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்களாம். நான் சொல்லவில்லை ஐயா, நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில்,
  “தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
            வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளுமிடத்தடி கொட்டிட
                   கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே”
என்று எல்லா  திவ்விய தேசத்து
எம்பெருமான்களும் பள்ளி  கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்கள் என்று  பாசுரத்தில் கூறுகிறார்
எத்தனை மகிமை ரங்கநாதனுக்கு!!`
                       renganathat in kalpagavirusham -                                   தொடருவோம் -----பகுதி- 2ல்

வியாழன், 8 செப்டம்பர், 2011

பெரியாழ்வார் அரங்கனைப் பற்றிய பாசுரங்கள்



பெரியாழ்வார் 
திருவில்லிப்புத்தூர் என்னும் பாண்டிய நாட்டில் முகந்த பட்டர்
என்னும் சோழிய பிராமனர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும்
பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது.
விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
இயல்பாகவே வாடா பெருங்கோவிலுடையானிடம் பக்தி கொண்டு இருந்தார்.அவருக்கு நந்தவனத்தில் இருந்து புஷ்பங்களைப் மாலையாகக் கட்டி பெருமானுக்குச் சாற்றுவதை  வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்தசமயத்தில் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு
நகர்வலம் வரும்போது  திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு
வழிபோக்கனைக்  கண்டான். அவனை எழுப்பி “நீ யார்?”  என்று கேட்டான்.
அந்தப் புதியவன் “ஐயா!  நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி
வருகிறேன்“ என்றான். மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும்
உண்டாகில் சொல்“ என்று கேட்டான். அவனும் “மழைக்காலத்தின்
தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில்,
முதுமையின் தேவையை இளமையில்,  மறுமையின் தேவையை
இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான். மன்னன்
மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவு நடந்தவை
சொல்லி “மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன?”  என்று கேட்டான்.

செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை
வைப்போம். சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி
அளிப்போம்“ என்றான். மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட
பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட
ஆணையிட்டான்.

ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய
எம்பெருமான் ஸ்ரீ வல்லபத்தேவன் அரசவையில் நடந்த விபரங்களைக்  கூறி
கிழியை அறுத்து வாவென்றார். இது இறைவன் ஆணை என மதுரைக்குப் புறப்பட்டார்.

மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது
அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர். அங்கிருந்த
மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன்
வரவேற்பதா?  என்று சலசலத்தனர். ஆழ்வாரும் உண்மையான பரம்பொருள்
திருமாலே என்றும் வைஷ்ணவமே முக்தியளிக்கும்  மதம் என வேதத்தை எடுத்து உவமானம் கூற பொற்கிழி தானாகவே வளைந்து கொடுத்தது.
ஆழ்வாரும் வேந்தரும் மாந்தரும் வியக்க விரைந்து கிழியறுத்தார்.

இது கண்ட மன்னனும், நம்பியும், மற்றுள்ள ஆன்றோரும், மக்களும்
அவரைப் பணிந்தனர். மன்னன் இவருக்கு பட்டர்பிரான் என்ற விருது
கொடுத்து யானை மேலேற்றி “வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன்
வந்தான்“ என்ற விருது ஊதச்செயது தானும் தன் பரிவாரங்களும்
உடன்வர நகர்வலம் வந்தான். இக்கோலகலத்தைக் காணுமாறு தன்
மக்களை அரசன் பணித்தபோது தன்னுடைய பக்தனின் மாட்சிமை காண
வந்தாற்போல் ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி, பிராட்டியருடன்,
தனக்குரிய ஆயுதங்கள் தரித்து, பிரம்மா ஆருத்ரன் மற்றும் இந்திரன்
முதலான தேவர்கள் துதிக்க காட்சி தந்தார். ஆழ்வார் எமபெருமானின்
கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாலும், அவர்
மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி, தான் அமர்ந்திருந்த
யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, “பல்லாண்டு
பல்லாண்டு பல்லாயிரமாண்டு பலகோடி நூறாயிரம்” என வாழ்த்தி
திருப்பல்லாண்டு பாடி அருளினார். மன்னன் மற்றுள்ள பக்தர்களையும்
தன்னோடு பாடச்செய்தார்.இந்த திவ்ய தேசத்தில் விளைந்த இப்பல்லாண்டு தான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்கு திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக  அமைந்து விட்டது. இவர் கண்ணனது திருஅவதாரச் செயல்களை போற்றி 44 திருமொழிகளாகப் பாடினார்.

இவற்றின் மொத்த பாசுரங்கள் 461 ஆகும். திருப்பல்லாண்டு பாசுரங்கள் 12 ஆகும்
மொத்தம் சேர்த்து 473 பாசுரங்கள். இவருடைய பாசுரங்கள்
பெரியாழ்வார் திருமொழி என்று அழைக்கப்பட்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதலில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் பாடிய தலங்கள்
1. திருவரங்கம்
2. திருவெள்ளறை
3. திருப்பேர்நகர்
4.கும்பகோணம்
5. திருக்கண்ணபுரம்
6. திருச்சித்திரக்கூடம்
7. திருமாலிருஞ்சோலை
8. திருக்கோட்டியூர்
9. திருவில்லிப்புத்தூர்
10. திருக்குறுங்குடி
11. திரு வேங்கடம்
12. அயோத்தி
13. சாளக்கிராமம்
14. பத்ரிநாத்
15. தேவப்ரயாகை
16. துவாரகை
17. மதுரா
18. ஆய்ப்பாடி
19. திருப்பாற்கடல்
20. பரமபதம்.



அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

பெரியாழ்வார் திருவரங்கனைப் பற்றி 35 பாடல்கள் பாடியுள்ளார்.
அவை திருமொழி, என்று பெயரில் வழங்கப்படுகிறது.
அவற்றை பின் வரும் பகுதிகளில் காணலாம்.

 முதல் பகுதி
திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்.

நாத முனிகள் அருளிச் செய்தது.

குருமுக மனதீத்ய ப்ராஹவேதான சேஷாந்
நரபதி பரக்லுப்தம் ஸுல்க மாதாது காம:!
ஸ்வஸுர மமரவந்த்யம்ரங்கனாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுலதிலகம்தம்  விஷ்ணுசித்தம்  நமாமி !!

பாண்டியப் பட்டர் அருளிச் செய்தது.

மின்னார் தடமதில்சூழ் வில்லிபுத்தூரென்று  ஒரு கால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம்* - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம்,* கீழ்மையினிற்சேரும் -
வழியறுத்தோம்  நெஞ்சமே ! வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று*
ஈண்டியசங்கம் எடுத்தூத*-- வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்*
பாதங்கள் யாமுடைய பற்று.
திருமொழி
1. கருவுடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்*
  உருவுடையாய்! உலகேழும்* உண்டாக வந்து பிறந்தாய்!*
  திருவுடையாள் மணவாளா!* திருவரங்கத்தே கிடந்தாய்!*
  மருவி மணம் கமழ்கின்ற* மல்லிகைப் பூச் சூட்டவாராய் . 2.7.2

2.சீமாலிகன் அவனோடு* தோழமை கொள்ளவும் வல்லாய்*
 சாமாறு அவனை நீ எண்ணிச்* சக்கரத்தால்த்தலைக்கொண்டாய் !*
 ஆமாரறியும் பிரானே! அணியரங்கத்தே கிடந்தாய்!*
 ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!* இருவாட்சிப் பூச் சூட்ட வாராய். 2.7.3

3.வண்டு களித்திருக்கும் பொழில்சூழ்
 வருபுனல் காவிரி தென்நரங்கன்
பண்டவன் செய்த கிரிடையெல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக்குனிக்க வல்லார்
கோவிந்தன் அடியார்களாகி என் திசைக்கும்  விளக்காகி நிற்பார்
இணையடி என் தலை மேலனவே                              

4.கண்ணி நன் மாமத்தில் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
 மன்னியசீர் மதுசுதனா! கேசவா!* பாவியேன்வாழுகந்து*
 உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்*
 என்னில் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம்தா. 3.3.2


தொடருவோம்









சனி, 18 ஜூன், 2011


குலசேகரஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சிக்களம் கேரளா.

குலசேகரஆழ்வார்


குலசேகர ஆழ்வார்- தொடர்ச்சி
அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்க‌நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

குலசேரகப்பெருமாள், பெருமாள் மீது பக்தி சொட்ட சொட்ட
பாடல்கள் பாடியுள்ளார்.
அவை "பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படுகிறது.
105 பாசுர‌ங்கள் கொண்டதாகும் அது.
இதில் அரங்கனாதனைப் பற்றி முதல் திருவந்தாதியில்
பதினோரு பாசுரங்கள் பக்தி சொட்ட சொட்ட
பாடியுள்ளார் என்றால் பாருங்கள்.
இரண்டாம் திருவந்தாதியில் ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளார்.
மூன்றாம் திருவந்தாதியில் பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் கண்ணபிரானைப் பற்றி வடமொழியில் " முகுந்த மாலை" என்ற
பக்தி ரசம் சொட்டும் பாசுரங்களையும் பாடியுள்ளார்.
இதில் என்ன முக்கியமானது என்றால் வடமொழியில் பாசுரங்களை
இயற்றிய ஒரே ஆழ்வார் "குலசேகர ஆழ்வார்" மட்டுமே.
குலசேகர ஆழ்வாரை பெருமாள் அணியும் கௌஸ்துபம் என்ற மாலையின் அம்சமாகக் கருதுவார்கள்
குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்வசு நகஷ்த்திரத்தில்
திருவஞ்சிக்களம் என்ற‌
ஊரில் (கேரளாவில் திருச்சூருக்கு அருகாமையில் உள்ளது) பிறந்தார்.

மூன்றாம் திருமொழி.

1.மெய்யில் வாழ்க்கையை* மெய்யெனெக் கொள்ளும்* இவ்
வையம் தன்னோடும்* கூடுவது இல்லையான்*
ஐயனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்* எந்தன் மாலுக்கே.

2.நூலினேரிடையார்* திறத்தே நிற்கும்*
ஞாலம் தன்னோடும்* கூடுவதில்லையான்*
ஆலியா அழையா* அரங்கா! என்று*
மாலெழுந்து ஒழிந்தேன்* எந்தன் மாலுக்கே.

3.மாரனார்* வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும்*
பாரினாரொடும்* கூடுவதில்லையான்*
ஆர மார்வன்* அரங்கன் அனந்தன்* நல்
நாரணன்* நரகாந்தகன் பித்தனே.

4.உண்டியே உடையே*உகந்ததோடும்,* இம்
மண்டலத்தோடும்* கூடுவது இல்லையான்*
அண்ட வாணன்* அரங்கன் வ்ன் பேய்முலை*
உண்ட வாயன் தன்* உன்மத்தன் காண்மினே.

5.தீதில் நன்னெறி நிற்க* அல்லாதுசெய்*
நீதி யாரொடும்* கூடுவது இல்லையான்*
ஆதி ஆயன்* அரங்கன், அந்தாமரைப்*
பேதை மாமணவாளன்* தன் பித்தனே.

6.எம்பரத்தர்* அல்லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வை* ஒன்றாக கருதிலன்*
தம்பிரான்* அமரர்க்கு அரங்க நகர்*
எம்பிரானுக்கு* எழுமையும் பித்தனே.


7.எத்திரத்திலும்* யாரொடும் கூடும்* அச்
சித்தந் தன்னைத்* தவிர்த்தனன் செங்கண்மால்*
அத்தனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பித்தனாய் ஒழிந்தேன்* எம் பிரானுக்கே.

8.பேயரே* எனக்கு யாவரும்* யானும் ஓர்
பேயனே* எவர்க்கும் இது பேசியென்*
ஆயனே!* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்* எம் பிரானுக்கே.

9.## அங்கை யாழி* அரங்கன் அடியினை*
தங்கு சிந்தை* தனிப்பெரும் பித்தனாய்*
கொங்கர் கோன்* குலசேகரன் சொன்னசொல்*
இங்கு வல்லவர்க்கு* ஏதமொன்றில்லையே (2)


10.## தேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே*
யாவரும் வந்து அடி வணங்க* அரங்கநகர்த் துயின்ற‌வனே*
காவிரிநல் நதிபாயும்* கணபுரத்தென் கருமணியே*
ஏவரிவெஞ் சிலைவலவா* இராகவனே தாலேலோ. (2)

சனி, 14 மே, 2011








குலசேகரஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சிக்களம் கேரளா.


குலசேகரஆழ்வார்










குலசேகர ஆழ்வார்
ஆரம் கெடப்பர
ன் அன்பர் கொள்ளார்* என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில் கையிட்டவன்* மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்* வில்லவர்கோன்
சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணியெ.

மேலே குறிப்பிட்ட பாடல் எதைப் பற்றித் தெரியுதா?

அது குலசேகர ஆழ்வார் பற்றிய சரித்திரம் தெரிந்தால் உஙகளுக்குப் புரிந்துவிடும்.
அது என்னய்யா சரித்திரம் என்கிறீர்களா?
குலசேகரர் சேரநாட்டை ஆண்டு வந்தார்.அவர் வீரமும் விவேகமும் உடைய அரசராக சிறப்பாக ஆண்டு வந்தார். கடவுள் பக்தி உடையவர்.
ரங்கனாதரி
டம் தீவிர பக்தி கொன்டவன்.இவருடைய பக்தி ம்ற்றும் ஆற்றலைக் கன்டு பான்டிய ராஜா தன் பெண்ணை இவருக்கு மணம் முடித்தான். இவருக்கும் ஒர் ஆண் மகவு பிறந்த‌து.மகனுக்கு திடவிரதன் என்று பெயர் சூட்டினான்.
நாளாக நாளாக,போரில் பல உயிர்கள் மடிவது குலசேகருக்கு வேதனையைக் கொடுத்தது.
ராமனைப் பற்றி உபன்யாசஙகள் கேட்பதில் ஆர்வம் கொன்டவனாக
இருந்தான்.அந்த சமயத்தில் உபன்யாசகர், ராமன் அசுரர்களை அழிக்க இலக்குமணனை சீதா பிராட்டிக்கு காவல் வைத்து விட்டு சென்றதை விவரித்துக் கொன்டிருந்தார். இதைக் கேட்ட,குலசேகரர உடனே தன் சேன்யங்களை ராமனுக்கு உதவச் செல்லும்படி ஆனைஇட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.உபன்யாசகர் ராமர் தனியாகவே அசுரரகளை வென்று விட்டார்,மற்றும் இது நடந்த்து திரேதாயுகத்தில்,இப்போது அல்ல என்று சொல்ல பின்பு தான் அமைதியானார் என்றால் பார்த்துக்கொள்ளுஙகள்.
இவர் அனுதினமும் பூஜை செய்வதற்காக ஒரு ராமர் விக்கிரஹத்தை சிலை
வடிவ
த்தில் செய்து பூஜித்து கொன்டே இருந்தார், நாட்டின் மீது அக்கரை இல்லாமல் இருந்து வந்தார்.இதை அறிந்த அமைச்சர்கள்,இப்படியே போனால் நாட்டின் நிலைமை மோசமாகிவிடும் என்று நினைத்து, ராமர் விக்கிரஹ்த்தின் மேல் இருந்த ஒரு நவரத்தின மாலையை எடுத்து ஒளித்து வைத்து விட்டு,அந்தப் பழியை விஷ்னு பக்தர்கள் மேல் போட்டு விட்டனர் என்றால் பாருங்கள்.
இதை அறிந்த குலசேகரர், புழுவாகத் துடித்தார்."விஷ்ணு பக்தர்கள் ஒரு நாளும் அப்படிச் செய்து இருக்கமாட்டார்கள். அவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப் பட மாட்டார்கள்" என்று திடமாக நம்பினார்.
இதனை மெய்ப்பிக்க உடனே மெய்க்காவலர்களைக் கூப்பிட்டு ஒரு குடத்தை எடுத்து வரச் சொன்னார். அதில் ஒரு பாம்பை போட்டார்."விஷ்ணு பக்தர்கள் மாலையை எடுத்து இருந்தார்கள் எனில் இந்தப் பாம்பு என் கைகளைக்
கடிக்கட்டும" என்று கைகளை குடத்துக்குள் விட்டார். என்ன அதிசியம் பாருங்கள்
பாம்பு அவரை ஒன்றும் செய்யவிலை.
இதனைக் கணட‌அமைச்சர்கள் மறைத்து வைத்திருந்த மாலையை திருப்பிக் கொடுத்து தாங்கள் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டனர் என்றால் பாருங்
கள்.
இதனைத் தான் "வாரம் கொடுகுடப் பாம்பில் கையிட்டவன்" என்று தனியனாக முன்னர் பார்த்தோம்.
இப்போது புரிந்ததா, குலசேகரனின் விஷ்ணு பக்தி?
இதனால் மனம் நொந்த குலசேகரர் அரசாட்சியை தன்னுடைய புதல்வனிடம் அளித்து விட்டு,இராமபிரானின் பல்வேறு புனிதத் தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டார்.
இராம பிரானைப் போலவே அரங்கனாதனிடமும் பக்தி கொண்டிருந்தார்.பெருமாளிடம் அதிக பக்தி கொனண்டிருந்ததாலோ என்னவோ,
இவர் "குலசேகரப் பெருமாள்"
என்று அழைக்கப்பட்டார்.
குலசேரகப்பெருமாள், பெருமாள் மீது பக்தி சொட்ட சொட்ட பாடல்கள் பாடியுள்ளார்.அவை "பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படுகிறது.
105 பாசுர‌ங்கள் கொண்டதாகும் அது.
இதில் அரங்கனாதனைப் பற்றி முதல் திருவந்தாதியில் பதினோரு பாசுரங்கள் பக்தி சொட்ட சொட்ட பாடியுள்ளார் என்றால் பாருங்கள்.
மேலும் கண்ணபிரானைப் பற்றி வடமொழியில் " முகுந்த மாலை" என்ற பக்தி ரசம் சொட்டும் பாசுரங்களையும் பாடியுள்ளார். இதில் என்ன முக்கியமானது என்றால் வடமொழியில் பாசுரங்களை இயற்றிய ஒரே ஆழ்வார் "குலசேகர ஆழ்வார்" மட்டுமே.
குலசே
கர ஆழ்வாரை பெருமாள் அணியும் கெளசத்துபம் என்ற மாலையின் அம்சமாகக் கருதுவார்கள்.
குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்வசு நகஷ்த்திர்த்தில் திருவஞ்சிக்களம் என்ற‌
ஊரில் (கேரளாவில் திருச்சூருக்கு அருகாமையில் உள்ளது) பிறந்தார்.






அரங்கநாதர் கருடசேவைக் காட்சி







பெருமாள் திருமொழி தனியன்கள்.

உடையவர் அருளிச் செய்தது

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே*
தென்னரங்கம் பாடவல்ல சீர்பெருமான்‍பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன்* எங்கள
குலசேகரன் என்றெ கூறு.

ஆரம் கெடப்பரன் அன்பர் கொள்ளாரென்று* அவரகளுக்கே
வாரங் கொடு குடப் பாம்பில் கையிட்டவன்* மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்* வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே.

குலசேகரர் பெருமாள் திருமொழி.

1.இருளிரியச் சுடர்ம‌ணிகள் இமைக்கும் நெற்றி*
இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த*
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும்*
அணிவிளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி*
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*
திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்*
கருமணியைக் கோமளத்தை கண்டு கொண்டு* என்
கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே.

2. வாயோர் ஈர் ஐ நூறு நுதங்கள் ஆர்த்த*
வளையுடம்பின் அழல்நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்சென்னி விதானமே போல்*
மேன்மெலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்*
காயாம்பூ மலரப் பிறங்கல் அன்ன மாலைக்*
கடியரங்கத்து அரவணையில்பள்ளி கொள்ளும்*
மாயோனை மனத்தூணெ பற்றி நின்று* என்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே?

3. எம்மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி* ஈரிரண்டு முகமும் கொண்டு*
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்*
தொழுதேத்தி இனிதிரைஞ்ச நின்ற* செம்பொன்
அம்மான் தன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற*
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
அம்மான் தன் அடியிணைக்கீழ் அலர்களிட்டு*
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே?

4. மாவினைவாய் பிளந்துகந்த மாலை*வேலை
வண்ணணை என் கண்ணணை வன்குன்றமேந்தி*
ஆவினை அன்று உய்யக்கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அந்த்மிழ் இன்பப்
பாவினை* அவ்வடமொழியைப் பற்ற்ற் றார்கள்*
பயிலற‌ங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
கோவினை நாவுற் வழுத்தி எந்தன் கைகள்*
கொய்ம் மல்ர்தூய் என்று கொலோ கூப்பும் நாளே?

5 இணையில்லாஇன்னிசை யாழ் கெழுமி* இன்புத்
தும்புரூவும் நாரதனும் இறைஜஞ்சி ஏத்த*
துணையில்லாத் தொன் மறைநூல் தோத்திரத்தால்*
தொன்மலர்க் கண் அயன் வணங்கி ஓவாதேத்த*
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ*
மதிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
மணிவண்ணன் அம்மானை கண்டு கொண்டு* என்
மலர்சென்னி என்று கொலோ வண்ங்கும் நாளே?

6 அளிமர்மேல் அயன் அரன் இந்திரனோடு* ஏனை
அமரர்கள் குழுவும் அரம்பையரும் மற்றும்*
தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்*
திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்*
களிமலர்சேர் கடல்வண்ணர் கமலக் கண்ணும்*
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டு* என்
உள்ளமிக என்றுகொலோ உருகும் நாளே?

7. மறம் திகழும் மனமொழிந்து வஞ்ச மாற்றி*
ஐம்புலங்கள் அடக்கி இடர் பார‌த் துன்பம்
துறந்து* இரு முப்போழுது ஏத்தி எல்லையில்லாத்
தொன்னெறிக் கண்* நிலை நின்ற தொண்டரான*
அறம் திகழும் மனத்தவர் தம் கதியைப் பொன்னி*
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
நிறம் திகழும் மாயோனைக் கண்டு என் கண்கள்*
நீர்மல்க என்று கொலோ நிற்கும் நாளே.

8.கோலார்ந்த நெடுஞ் சார்ங்கம் கூனற் சங்கம்*
கொலையாழி கொடுந் தண்டு கொற்ற ஒள்வாள்*
காலார்ந்த கதிக் கருடனென்னும்* வென்றிக்
கடும்பறவை இவையனைத்தூம் புற்ஞ்சூழ் காப்ப*
சேலார்ந்த நெடுங்கழனி சோல சூழந்த*
திருவரங்க தரவனையில் பள்ளி கொள்ளும்*
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி*
வல்வினையேன் என்று கொலோ வாழும் நாளே?

9. தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமித்* திருப்புகழ்கள் பலவும் பாடி*
ஆராத மனக்களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர* நினைந்துருகி ஏத்தி* நாளும்-
சீரார்ந்த முழவோசை பரவை காட்டும்*
திருவரங்க தரவனையில் பள்ளி கொள்ளும்*
பேராழி அம்மானைக் கண்டு துள்ளிப்*இப்
பூதலத்தில் எறு கொலோ புரளும் நாளே?

10.வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய‌-
மண்ணுய்ய* மண்ணுலகில் மனிசர் உய்ய*
துன்பமிகு துயர் அகல* அயர்வு ஒன்ற்றில்லாச்
சுகம் வளர* அகமகிழும் தொண்டர் வாழ*
அன்போடு தென் திசை நோக்கி பள்ளீ கொள்ளூம்*
அணியரங்கன் திருமுற்றத்துஅடியார் தஙகள்*
இன்பமிகு பெருங்குழவு கண்டு* யானும்-
இசைந்துடனே என்று கொலோ இருக்கும் நாளே?

11 .திடர் விள்ங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டு*
திருவரங்க தரவனையில் பள்ளி கொள்ளூம்*
கடல்விளங்கு கரு மேனி அம்மான் தன்னைக்*
கண்ணாரக் கண்டு உகக்கும் காதல் த்ன்னால்*
குடைவிள‌ங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள்*
கூடலர் கோன் கொடைகுலசேகரன் சொற்செய்த*
நடைவிளங்கு நாரணண் அடிகீழ் நண்ணுவாரே.

இரண்டாம் திருமொழி.

12. தேட்டரும் திறல் தேனினைத்* தென்னரங்கனை* திருமாதுவாழ்
வாடடமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால்கொள் சிந்தையராய்*
ஆட்டமேவி யலந்தழைத்து* அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம்*
ஈட்டம் கண்டிடக் கூடுமேலது காணும் பயனாவதே.

13. தோடுலா மலர் மங்கை தோளினைத்* தோய்ந்ததும்* சுடர்வாளியால்*
நீடுமராமரம் செற்றதும்* நிரைமேத்ததும் இவையே நினைந்து*
ஆடிப்பாடி அரங்கவோ என்றழைக்கும்*தொண்டர் அடிப்பொடி ஆட‌
கங்கை நீர் குடைந்தாடும்* வேட்கை என்னாவதே.

14. ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்* முன் இராமனாய்*
மாறடர்த்ததும் மண்ணளந்ததும்* சொல்லிப் பாடி*
வண் பொன்னிப்பேராறு போல் வரும் கண்ணனீர் கொண்டு* அரங்கன்கோயில் திருமுற்றம்*
சேறு செய் தொண்டர் சேவடிச் செழும்சேறு என் சென்னிக் கணிவனே.


15. தோய்த்த தண்தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும்* உடன்று ஆய்ச்சி கண்டு*
ஆர்த்த தோளுடை எம்பிரான்* என்னரங்கனுக்கு அடியார்களாய்*
நாத்தழும்பெழ நாரணா என்றழைத்து* மெய் தழும்பத் தொழுது
ஏத்தி,*இன்புறும் தொண்டர்சேவடி* ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே.


16. பொய்சிலைக் குரல் ஏற்று எறுத்தம் இறுத்து* போரர வீர்த்தகோன்*
செய்சிலைச்சுடர் சூழொளித்*திண்ண மாமதிள் தென்னரன்ங்கனாம்*
மெய்சிலைக் கருமேகம் ஒன்று* தம் நெஞ்சில் நின்று திகழப்போய்*
மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என்மனம் மெய் சிலிர்க்குமே.


17. ஆதி அந்தம் அனந்தம் அற்புதமான* வனவர் தம்பிரான்*
பாதமாமலர் சூடும் பத்தியிலாத* பாவிகள் உயிந்திட*
தீதில் நன்னெறி காட்டி* எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
காதல் செய்தொண்டர்க்கு எப்பிறப்பிலும்* காதல் செய்யும் என் நெஞ்சமே.

18. காரினம் புரை மேனி நல் கதிரமுத்த* வெண்ணகைச் செய்யவாய்*
ஆரமார்வன் அரங்கனென்னும்* அரும் பெருஞ்சுடர் ஒன்றினை*
சேரும் நெஞ்சினராகிச்* சேர்ந்து கசிந்திழிந்த கண்ணீர்களால்*
வார நிற்பவர் தாளிணைக்கு* ஒரு வாரமாகும் என் நெஞ்சமே

19. மாலையுற்ற கடல் கிடந்தவன்* வண்டு கிண்டு ந‌றுந்துழாய்*
மாலையுற்ற வரைப் பெருந் திருமார்வனை மலர்க் கண்ணனை*
மாலையுற்று எழுந்தாடிப் பாடி* திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு* மாலையுற்றது என் நெஞ்சமே

20. மொய்த்து கண்பனி சோர மெய்கள் சிலிர்ப்ப* ஏங்கி இளைத்து நின்று*
எய்த்து கும்பிடு நட்டமிட்டெழுந்து* ஆடிப்பாடி இறைஞ்சி* என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி* அவனுக்கே
பித்தராமவர் பித்தர் அல்லர்கள்* மற்றையார் முற்றும் பித்தரே.

21. அல்லிமாமலர் மங்கைநாதன்* அரங்கன் மெய்யடியார்கள் தம்*
எல்லையில் அடிமைத் திறத்தினில்* என்றும் மேவு மனத்தனாம்*
கொல்லிகாவலன் கூடல்நாயகன்* கோழிக்கோன் குலசேகரன்*
சொல்லின் இந்தமிழ் மாலை வல்லவர்* தொண்டர் தொண்ட்ர்கள் ஆவரே.