வியாழன், 30 டிசம்பர், 2010






பொய்கையாழ்வார்



பொய்கையாழ்வார் அருளிச் செய்தது

அவரைப்பற்றிய தனியன் முதலியாண்டான் அருளியது

கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைபிரான் கவிஞர்போரேறு - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழ் அந்தாதி
படிவிளங்தச் செய்தான் பரிந்து.

முதல் திருவந்தாதி

1.
ஒன்றும் மறந்தறியேன்* ஓதநீர்வண்ணனைநான்*
இன்றுமறப்பனோ ஏழைகாள்* -அன்று
கருவரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கணடேன்*
திருவரங்கமேயான் திசை (1) 2087









பூதத்தாழ்வார் .


பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

அவரைப்பற்றிய தனியன் திருக்குரிகைபிரான் பிள்ளான் அருளியது

என்பிறவி தீர இரைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி அளித்தானை -நன்புகழ் சேர் -
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்

பூதத்தாழ்வார்

மகாபலிபுரம் திருத்தலத்தில் எம்பெருமான் நாராயணன் (கிடந்த வண்ணம்) சயனக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
பூதத்தாழ்வார் பெருமாளின் 5 ஆயுதங்களின் ஒன்றான கதையின்(கௌமோதகி) அம்சமாவார். இவருக்கான மலர் -

குறுக்கத்தி(நீலோற்பல மலர்) ஆகும்.

எம்பெருமான் பஞ்ச பூதங்களாக இருக்கிறார் என்று நம்பி, பூதத்தாழ்வார் அந்த நம்பியின் அம்சங்களனைத்தையும் கொண்ட பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார்.

பஞ்ச பூதங்களாக இருக்கும் எம்பிரானைப் பற்றி பாடும் ஆழ்வார், அதனால் பூதம் + ஆழ்வார் = பூதத்தாழ்வார்.

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் அரங்கனைப் பற்றி 4 பாசுரங்களைப் பாடியுள்ளார்
2. மனத்துள்ளான் வேங்கடத்தான்* மாகடலான்* மற்றும்-
நினைப்பிரய* நீள் அரங்கத்துள்ளான்*- எனைப்பலரும்
தேவாதிதேவன்* எனப்படுவான்* முன்னொருநாள் -
மாவாய் பிளந்த மகன் (2) 2209
3.பயின்றது அரங்கம் திருக்கோட்டி*பன்னாள் -
பயின்றதுவும்* வேங்கடமே பன்னாள்,*-பயின்றது -
அணிதிகழும் சோலை* அணிநீர் மலையே *
மணிதிகழும் வண்தடக்கை மால் (3) 2227
4.தமருள்ளம் தஞ்சை *தலையரங்கம் தண்கால் *
தமருள்ளம் தண்பொருப்பு வேலை *தமருள்ளம் -
மாமல்லை கோவல் *மதிட்குடந்தை என்பரே,*
ஏவல்ல எந்தைக் கிட. 2251
5.திறம்பிற்று இனியறிந்தேன் *தென்னரங்கத்து எந்தை *
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் ,*-திறம்பாச்-
செடிநரகை நீக்கி *தான் செல்வதன் முன் ,*வானோர் -
கடிநிகர வாசல் கதவு. 2269