ஞாயிறு, 30 ஜனவரி, 2011



அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்"
என்று ஸ்ரீரங்நாதனை நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி
பாடிய பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

திருமழிசையாழ்வார்












திருவெஃகா என்னும் வேக சேது










ஒரு சமயம் ப்ரம்மலோகத்தில்
நாமகள் (சரஸ்வதி) மற்றும் பூமகள் (லக்ஷ்மி) இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
நீ பெரியவளா? நான் பெரியவளா? என்று. ப்ரம்மா சும்மா இல்லாமல்,பூமகள், லக்ஷ்மி தாயார் தான் பெரியவர் என்று தீர்வுசொல்லிவிட்டு போய் விட்டார். இதேபோல எந்த நதி என்று சரஸ்வதி வினவ, ப்ரம்மா விஷ்ணுவின் பாதத்தில் இருந்துபுறப்படும் கங்கை தான் பெரிய நதி என்று பதில் கூறிவிட்டு போய்விட்டார். இதைக் கேட்ட சரஸ்வதி கோபம்
கொண்டுஅங்கிருந்து மறைந்து கங்கைக் கரை ஓரமாகச் தவம் செய்யத் தொடங்கினார்.
நான்முகன், ப்ரம்மா காஞ்சிபுரத்தில்பெரிய அஸ்வமேத யாகம் செய்ய எண்ணி ஸரஸ்வதியை தன்னுடன் இருக்க
அழைத்தார்.இதற்காக தனது மகன் வஷிஷ்டனை ஸரஸ்வதியிடம் அனுப்பினார். ஆனால் கோபம் குறையாத ஸரஸ்வதி உடன்வர மறுத்துவிடுகிறார்.எனவே ப்ரம்மதேவன் மற்ற மனைவிமார்களுடன் யாகத்தை துவக்கிவிடுகிறார்.
இதைப் பார்த்த அசுரர்கள் யாகத்தை குலைக்க எண்ணி ஸரஸ்வதியிடம் சென்று விஷயத்தை சொல்லி கோபத்தைஅதிகரிக்கின்றனர். ப்ரம்மதேவன் மீது கோபம் கொண்ட ஸரஸ்வதி "வேகவதி" என்ற நதியாகப் பிறளயமாக தெற்கு நோக்கி
புறப்பட்டு யாகத்தை அழிக்க வருகிறார். இதைக் ஸீமன் நாராயணன் யாகத்தை காக்க ஆதிசெஷனுடன் ஆற்றின் குறுக்கே படுத்து ஆற்றின் வேகத்தை தடுத்து நிறுத்துகிறார்.எனவே இங்கு பெருமாள் "வேக சேது" என்று அழைக்கப்படுகிறார்.

நான்முகன் திருவந்தாதி.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதியிலும் அரங்கனைப் பற்றி 4 பாசுரங்களை இயற்றிஉள்ளார்.

திருமழிசையாழ்வார் பற்றி சீராப்பிள்ளை அவர்களின் தனியன்.

நாராயணன் படைத்தான் நான்முகனை*
நான்முகனுக்கு ஏரார் சிவன்பிறந்தான் என்னும்சொல்*
சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே*
மொய்பூமழிசைப் பரனடியே வாழ்தது.

1 பாலில் கிடந்ததுவும்* பண்டரங்கம் மேயதுவும்*
ஆலில் துயின்றதுவும் ஆரறிவார்*
ஞாலத்து ஒரு பொருளை* வானவர் தம் மெய்ப்பொருளை
அப்பில் அருபொருளை* யானறிந்தவாறு? 2384 3

2 அவன் என்னையாளி* அரங்கத்து அரங்கில்*
அவனென்னை எய்தாமல் காப்பான்*
அவன் என்னது உள்ளத்த* நின்றான் இருந்தான் கிடக்குமே*
வெள்ளத்தரவணையின் மேல். 2411 30
3. நாகத்தணைக் குடந்தைது* வெஃகா திருஎவ்வுள்*
நாகத்தணை அரஙகம் பேரன்பில்*
நாகத்தணை பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான். 2417 36

4 ஆட்பார்த்து உழிதருவாய்*கண்டுகொள் என்று *
நின்தாள் பார்த்து உழிதருவேன்* தன்மையை*
கேட்பார்க்கு அரும்பொருளாய் நின்ற* அரஙகனே*
உன்னை விரும்புவதே* விள்ளேன் மனம். 2441

வியாழன், 20 ஜனவரி, 2011



அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?

அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்

"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉ
ள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

திருமழிசையாழ்வார

திருமழிசை என்னும் ஊரில் பார்கவ முனி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் புத்திர பாக்யம் வேண்டி யாகம் இயற்றி, அவர் மனைவியும் கருவுற்றார். 12 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு, முழுமையற்ற நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பின்பு, அன்னை மகாலெட்சுமி, அய்யன் விஷ்ணுவுடன் வந்து அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர்.
அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது. அவரது வலது கால் கட்டை விரலில் கூடுதலான ஒரு கண்ணும் இருக்கும். அவ்வழியே வந்த ஹரிஜன இனத்தைச் சேர்ந்த திருவாளன் என்பவர், ஸ்ரீமன் நாராயணின்
பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமான அக்குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அக்குழந்தையைக் கண்டவுடன் அவரது மனைவியார் பங்கயச்செல்வி மிகவும் மகிழ்ந்து, தங்களின் குழந்தையற்ற குறையை நீக்கவே இக்குழந்தை வந்தது என்று எண்ணி அக்குழந்தையை வளர்க்க முடிவு செய்தனர். அவர் துணைவியார், அக்குழந்தைக்கு பாலமுது கொடுக்க
முயன்ற போது குழந்தை, உணவு உண்ண மறுத்து விட்டது. பல நாள்கள் உணவு உ ண்ணாமல் இருந்தும் அதன் உடல்நிலை எவ்வித மாறுதலும் இன்றி, நன்றாகவே இருந்தது. இச்சம்பவம், ஊர் முழுவதும் பரவி, பலர் அக்குழந்தையைக் காண வந்து சென்றனர்.

ஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக் கண்டனர். அவர்கள் குழந்தைக்கு, பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது. ஒருநாள், முதியவர் ஒருவரும் வந்து அக்குழந்தையைக் கண்டார். அக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஞான ஒளியைக் கண்ட அவர், இது எம்பிரான் அருள் பெற்ற, தெய்வக்குழந்தை
என்று குறிப்பிட்டு, அக்குழந்தை மிச்சம் வைக்கும் பாலை, அந்த வயது முதிர்ந்த தம்பதிகள் உண்டால் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் கூறினார். அதைப் போலவே, அவர்களும் செய்து, ஒரு ஆண்மகவை ஈன்றனர். அக்குழந்தைக்கு கனி கண்ணன் என்று பெயர் சூட்டினர்.

கனி கண்ணன், வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை ஆழ்வாரின் நெருங்கிய நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும் ஏற்றுக்கொண்டான்.

பேயாழ்வார், திருமழிசையாழ்வாருக்கு, பக்தி சாரர் என்னும் திருப்பெயரிட்டு அழைத்தார்.அதன்பின், திருமழிசையாழ்வார் பல திருத்தலங்களுக்குச் சென்று ஆனந்தக்கண்ணனைக் கண்ணார தரிசித்து, திருவேக்கா என்னும் ஊரை வந்து அடைந்தார்.யதோத்தகாரி சன்னதியில் தியான நிலையில் இருந்தார்.
அங்கு, அவருக்குப் பொறுப்பாக அனைத்துப் பணிவிடைகளும் செய்த ஒரு மூதாட்டியின் அன்பிற்கு மெச்சி, அவருக்கு ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். அதைக்கேட்ட அம்மூதாட்டி, தனக்கு இந்த வயோதிகத் தோற்றம் பிடிக்கவில்லை என்றும், தான் என்றும் இளமை மாறாத அழகிய இளம்பெண்ணாக இருக்க வரம் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். அவர் வேண்டுதலைக் கேட்ட ஆழ்வாரும் அவ்வாறே அருளினார். ஒருநாள் நகர்வலம் வந்த பல்லவ மன்னன், அவ்விளம் பெண்ணைக் கண்டு, அவள் அழகில் மயங்கி, அவளையே மணந்தான்.
ஆண்டுகள் பல கழிந்தன. மன்னனுக்கு மூப்பு நிலை வரத்துவங்கியது. ஆனாலும், அவன் மனைவி, அதே இளமை மாறா அழகுடன் இருந்தாள். இதைக்கண்டு அதிசயித்த பல்லவ மன்னன், அவளின் இளமையின் இரகசியத்தைக் கேட்டான். அவளும், திருமழிசையாழ்வாரின் பெருமையை எடுத்துக் கூறினாள்.

மறுநாள், மன்னன் தன் சேவகர்களை அனுப்பி திருமழிசையாழ்வாரை அழைத்து வரச்சொன்னார். அவர் வர மறுத்து விட்டார். மீண்டும், ஆட்களை அனுப்பினார். கனிகண்ணன், அங்கு சென்றார்.மன்னன், கனி கண்ணனிடம், 'என்னைப் புகழ்ந்து உன் குரு பாட வேண்டும்', என்று கூறினார்.ஆனால், கனி கண்ணனோ, 'எம் குருநாதர் எம்பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பாட மாட்டார்', என்று கூறினார்.சரி போனால் போகட்டும் விடு நீயாவது என்னைப் பற்றி பாடு என்று மன்னன் கனிகண்ணனிடம் ஆணையிட்டார்.
ஆனால் கனிகண்ணனோ பாட மறுத்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், அவரை அந்த ஊரில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.
கனிகண்ணன் விரைந்து திருமழிசையாழ்வாரிடம் வந்து, அரண்மனையில் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, தான் திருவேக்காவை விட்டுப் புறப்படுவதாகவும். அதற்காகத் தன்னை மன்னித்து ஆசி அருள வேண்டும் என்று வேண்டினார், கனிகண்ணனார். திருமழிசையாழ்வார் தானும் உடன் வருவதாக கனி கண்ணனிடம் கூறி, உடன் புறப்பட்டார். புறப்படும் வேளையில், காஞ்சியில் வீற்றிருந்த எம்பெருமானை உடன் வருமாறு ஆணையிட்டார், ஆழ்வார்

"கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"

என்று பாடினார் திருமழிசையாழ்வார்.

அவர் சொன்னவுடன், எம் பெருமானும் அவர்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார். கமலக்கண்ணன் ஊரை விட்டுச் சென்றதால், காஞ்சி மாநகரம் தன் பொலிவை எல்லாம் இழந்து, ஒரே நாளில் நலிவுற்றுவிட்டது. மறுநாள் காலை, பணியாளன் ஒருவன் விரைந்து வந்து மன்னனிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அனைத்தையும் அறிந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்து அவர்களைத் தேடிச் சென்று, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர்களை மீண்டும் காஞ்சிக்கு வர வேண்டினான்.
அவர்களும், மன்னன் கூற்றுக்கு இசைந்து, காஞ்சிபுரம் செல்ல முடிவு செய்தனர். இப்பொழுது,

"கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"

என்று ஆழ்வார் கூற, மீண்டும் ஸ்ரீநிவாசன், காஞ்சியில் வாசம் செய்யத் துவங்கினான்.
நம்ம கனிகண்ணன், கமலக்கண்ணன், திருமழிசையாழ்வார் மூணு பேரும் ஓர் இரவு ஒரு இடத்துல தங்கியிருந்த இடம்தான் 'ஓர் இரவு இருக்கை' அப்படின்னு அழைக்கப்படுகிறது. அந்தப் பெயர் மருவி தற்காலத்தில், 'ஓரிக்கை' ன்னு சொல்றாங்க.
அதன் பிறகு, சிறிது காலம் கழித்து திருமழிசையாழ்வாரும், கனிகண்ணனும் திருக்குடந்தை நோக்கிப் பயணித்தனர். அங்கே காவிரியாற்றில் அவர் பாடிய பாடல்களை இட்ட போது அனைத்தையும் காவிரித்தாய் எடுத்துக் கொண்டு திருச்சந்த விருத்தம் (120 பாசுரம்) மற்றும் நாண்முகன் திருவந்தாதி (90 பாசுரம்) ஆகிய இரண்டை மட்டும், திருமழிசையாழ்வாரின் பொற்பாதத்தில்
சேர்ப்பித்தாள். அவர் அவற்றை எடுத்துக் கொண்டு ஆரவமுதப் பெருமாளிடத்தில் வந்து சேர்ந்தார். பின், திருக்குடந்தையிலேயே தங்கி எம்பெருமான் பெயரில் மங்களசாசனம் பாடினார்.

திருச்சந்த விருத்தத்தில் அவர் கூறுவது:

நின்றது எந்தை ஊரகத்துஇருந்தது எந்தை பாடகத்து
அன்று வாக்கனைக் கிடந்துஎண்ணிலாத முன்னெல்லாம்
அன்று நான் பிறந்திலேன்;பிறந்த பின் மற்ந்திலேன்
நின்றதும் இருந்ததும்கிடந்ததும் என்னெஞ்சினுள்ளே!

நீ வெவ்வேறு ஊர்களில், நின்று, இருந்து, கிடந்து என்னும் வெவ்வேறு கோலங்களில், கணக்கில்லாத யுகங்களாய் அருள்

புரிந்துக் கொண்டிருக்கின்றாய்! அப்பொழுதெல்லாம், நான் பிறக்கவேயில்லை. நான் பிறந்த பின்பு உன்னை ஒருகாலத்திலும் மறந்ததேயில்லை. நான் இருக்கின்ற இக்காலத்தில், நீ நின்றது, இருந்தது, கிடந்தது எல்லாம் என் இதயத்தாமரைக்குள்ளேயன்றி வேறெங்குமில்லை! என்று பாடி பரவசமடைகிறார், திருமழிசையாழ்வார்.

திருகச்சநம்பிகள் திருமழிசையாழ்வார் பற்றி இயற்றிய தனியன்கள்.

தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும் ,
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே.

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து * தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க,-உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் ,* மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.

திருமழிசையாழ்வார் திருவரங்கனைப் பற்றி பாடிய பாடல்கள் இவை.

1. அரங்கனே! தரங்கநீர்* கலங்க அன்று குன்று சூழ் *
மரங்கள் தேய மாநிலம் குலுங்க* மாசுணம் சுலாய் *
நெருங்கநீ கடைந்தபோது,* நின்ற சூரர் என்செய்தார்?*
குரங்கை ஆளுகந்த எந்தை !* கூறுதேற வேறிதே.* 21.

2.கொண்டை கொண்ட கோதைமீது* தேனுலாவு கூனிகூன்*
உண்டை கொண்ட அரங்கவோட்டி * உள் மகிழ்ந்த நாதனூர்
நண்டையுண்டு நாரை பேர* வாளை பேய நீலமே,*
அணடை கொண்டு கெண்டைமேயும்* அநதணீர் அரங்கமே. 49

3.வெண்திரைக் கருங்கடல்* சிவந்து வேவ முன்னோர்நாள்*
திண்திறல் சிலக்கை வாளிவிட்டவீரர் சேருமுர்*
எண் திசைக் கணங்களும்* இறைஞ்சி ஆடு தீரத்த நீர்,*
வண்டு இரைத்த சோலை வேலி* மன்னுசீர் அரங்கமே . 50

4.சரங்களைத் துரந்த* வில் வளைத்து இலங்கை மன்னவன்,*
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த* செல்வர் மன்னு பொன்னிடம் ,*
பரந்து பொன்நிறந்து நுந்தி* வந்து அலைக்கும் வார்புனல்,*
அரங்கமெனபர் நான்முகத்து *அயன்பணிந்த கோயிலே. 51

5.பொற்றை உற்ற முற்றல் யானை* போர் எதிர்த்து வந்ததை*
பற்றி உற்று மற்றதன்* மருப்பொசித்த பாகனூர்,*
சிற்று எயிற்றுமுற்றல்மூங்கில்* மூன்று தண்டர் ஒன்றினர் ,*
அற்ற பற்றர் சுற்றி வாழும்* அந்தணீர் அரங்கமே. 52

6.மோடியோடு இலச்சையாய* சாபம் எய்தி முககணான் ,*
கூடு சேனை மக்களோடு* கொண்டு மண்டி வெஞ்சமத்து -
ஓட* வாணண் ஆயிரம்* கரங்கழித்த ஆதிமால் ,*
பீடுகோயில் கூடுநீர்* அரங்கமென்ற பேர் அதே. 53

7.இலைத் தலை சரந்துரந்து* இலங்கை கட்டழித்தவன் ,*
மலைத் தலைப் பிறந்து இழிந்து* வந்து நுந்து சந்தனம்,*
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த* குங்குமக் குழம்பினோடு,*
அலைத்தொழுகு காவிரி* அரங்கமேய அண்ணலே. 54

8.மன்னு மாமலர் கிழத்தி* வைய மங்கை மைந்தனாய்,*
பின்னும் ஆயர் பின்னைதோள்* மணம் புணர்ந்தது அன்றியும்,
உன்ன பாதம் என்ன சிந்தை* மன்ன வைத்து நல்கினாய்,*
பொன்னி சூழ் அரங்கமேய* புண்டரீகன் அல்லையே? 55

9.சுரும்பு அரங்கு தண்துழாய்* துதைந்து அலர்ந்த பாதமே,*
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு* இரங்கு அரங்க வாணனே,*
கரும்பிருந்த கட்டியே* கடல்கிடந்த கண்ணனே,*
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த* வில்லி இராமனே! 93

10.பொன்னிசூழ் அரங்கமேய * பூவைவண்ண! மாய! கேள்,*
என்னதாவி என்னும்* வல் வினையின் உள் கொழுந்து எழுந்து,*
உள்ளபாதம் என்ன நின்ற* ஒண்சுடர்க் கொழுமலர் ,*
மன்ன வந்து பூண்டு* வாட்டமின்றி எங்கும் நின்றதே. 119