ஞாயிறு, 30 ஜனவரி, 2011



அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்"
என்று ஸ்ரீரங்நாதனை நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி
பாடிய பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

திருமழிசையாழ்வார்












திருவெஃகா என்னும் வேக சேது










ஒரு சமயம் ப்ரம்மலோகத்தில்
நாமகள் (சரஸ்வதி) மற்றும் பூமகள் (லக்ஷ்மி) இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
நீ பெரியவளா? நான் பெரியவளா? என்று. ப்ரம்மா சும்மா இல்லாமல்,பூமகள், லக்ஷ்மி தாயார் தான் பெரியவர் என்று தீர்வுசொல்லிவிட்டு போய் விட்டார். இதேபோல எந்த நதி என்று சரஸ்வதி வினவ, ப்ரம்மா விஷ்ணுவின் பாதத்தில் இருந்துபுறப்படும் கங்கை தான் பெரிய நதி என்று பதில் கூறிவிட்டு போய்விட்டார். இதைக் கேட்ட சரஸ்வதி கோபம்
கொண்டுஅங்கிருந்து மறைந்து கங்கைக் கரை ஓரமாகச் தவம் செய்யத் தொடங்கினார்.
நான்முகன், ப்ரம்மா காஞ்சிபுரத்தில்பெரிய அஸ்வமேத யாகம் செய்ய எண்ணி ஸரஸ்வதியை தன்னுடன் இருக்க
அழைத்தார்.இதற்காக தனது மகன் வஷிஷ்டனை ஸரஸ்வதியிடம் அனுப்பினார். ஆனால் கோபம் குறையாத ஸரஸ்வதி உடன்வர மறுத்துவிடுகிறார்.எனவே ப்ரம்மதேவன் மற்ற மனைவிமார்களுடன் யாகத்தை துவக்கிவிடுகிறார்.
இதைப் பார்த்த அசுரர்கள் யாகத்தை குலைக்க எண்ணி ஸரஸ்வதியிடம் சென்று விஷயத்தை சொல்லி கோபத்தைஅதிகரிக்கின்றனர். ப்ரம்மதேவன் மீது கோபம் கொண்ட ஸரஸ்வதி "வேகவதி" என்ற நதியாகப் பிறளயமாக தெற்கு நோக்கி
புறப்பட்டு யாகத்தை அழிக்க வருகிறார். இதைக் ஸீமன் நாராயணன் யாகத்தை காக்க ஆதிசெஷனுடன் ஆற்றின் குறுக்கே படுத்து ஆற்றின் வேகத்தை தடுத்து நிறுத்துகிறார்.எனவே இங்கு பெருமாள் "வேக சேது" என்று அழைக்கப்படுகிறார்.

நான்முகன் திருவந்தாதி.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதியிலும் அரங்கனைப் பற்றி 4 பாசுரங்களை இயற்றிஉள்ளார்.

திருமழிசையாழ்வார் பற்றி சீராப்பிள்ளை அவர்களின் தனியன்.

நாராயணன் படைத்தான் நான்முகனை*
நான்முகனுக்கு ஏரார் சிவன்பிறந்தான் என்னும்சொல்*
சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே*
மொய்பூமழிசைப் பரனடியே வாழ்தது.

1 பாலில் கிடந்ததுவும்* பண்டரங்கம் மேயதுவும்*
ஆலில் துயின்றதுவும் ஆரறிவார்*
ஞாலத்து ஒரு பொருளை* வானவர் தம் மெய்ப்பொருளை
அப்பில் அருபொருளை* யானறிந்தவாறு? 2384 3

2 அவன் என்னையாளி* அரங்கத்து அரங்கில்*
அவனென்னை எய்தாமல் காப்பான்*
அவன் என்னது உள்ளத்த* நின்றான் இருந்தான் கிடக்குமே*
வெள்ளத்தரவணையின் மேல். 2411 30
3. நாகத்தணைக் குடந்தைது* வெஃகா திருஎவ்வுள்*
நாகத்தணை அரஙகம் பேரன்பில்*
நாகத்தணை பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான். 2417 36

4 ஆட்பார்த்து உழிதருவாய்*கண்டுகொள் என்று *
நின்தாள் பார்த்து உழிதருவேன்* தன்மையை*
கேட்பார்க்கு அரும்பொருளாய் நின்ற* அரஙகனே*
உன்னை விரும்புவதே* விள்ளேன் மனம். 2441

கருத்துகள் இல்லை: