ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-2

தொண்டரடிப்டி ஆழ்வார்
 ஸ்ரீரங்கம் ஏன்?  தொடர்கிறது:
தொண்டரடிப் பொடியாழ்வார் பெருமானிடம் வேண்டுகிறார்.,தன் திருமாலையில்
பெருமானே! மனிசர் வாழ்வு நிலையில்லாதது. ஒருவர் நூறு வயது வாழ்வதாகக் கொண்டாலும்,அதில் பாதி ஆயுள், அதாவது ஐம்பது ஆண்டுகள் தூக்கத்திலேயே போய் விடுகிறது. மீதி ஆண்டுகளில் பசி, பிணி, மூப்பு, பாலகன் என்று போய் விடுகிறது ஆதலால் எனக்கு இந்த லீலா விபுதி வேண்டாம் ஸ்வாமி.
வேத நூல்பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே!
பெருமான்:அதுவும் சரிதான், லீலா விபுதி  அழியக்ககூடியது. அப்ப உன்னை
                       நான்   மற்றும் நித்ய   ஸூரிகள் வாசம் செய்யும்  நித்ய  விபுதிக்கு 
                      அழைத்துச் சென்று விடவா?
ஆழ்வார்::பசுமையான மலைபோன்ற மேனியைக்   கொண்ட, பவளத்தைப்
                    போல உன் வாய்  என்ற அமுதத்தை விட்டு, நீ சொல்கின்ற
                  அந்த நித்ய விபூதியில் என்ன இருக்கிறது   என்று என்னை அங்கே 
                  அழைத்துச்  செல்கிறேன் என்கிறாயே?
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!

பெருமான்: ஏன் ஆழ்வாரே, லீலா விபூதியும்   வேண்டாம், நித்ய விபூதியும்
                       வேண்டாம்  என்கிறீர்.  பின் எங்குதான் வாசம்  செய்வதாக
                        உத்தேசம்?  மொத்தமே  ரெண்டு விபுதிதானே உள்ளது.
                      “வைகுந்தம்  அடைவது மன்னவர் விதி"
                      என்று உமக்குத்  தெரியாதா? எல்லா மனிசர்களும் பாப   
                       புண்ணியங்களைத்  தொலைத்துவிட்டு  அவர்களை
                      இங்குதானே நான் அழைத்துக்  கொள்கிறேன். பின் எங்குதான்
                       வாசம்  செய்வதாக உத்தேசம்?
ஆழ்வார்: நான் தான் என்னுடைய பாசுரங்களில்  சொல்கிறேனே? அந்த
                    இடத்திலேயே  எனக்கு ஒரு இடம் தரக்கூடாதா?
பெருமான்: எனக்குத் தெரியாமல் மூன்றாவது  விபுதியா? எனக்கே 
                     தெரியாமல்  ஒரு  இடமா?
ஆழ்வார்: பாசுரங்களின் முடிவில் “அரங்கமா   நகருளானே" என்று
                     பாடினேனே, எனவே  எந்த அரங்கன் இருக்கும் இடமோ
                   அந்த  மூன்றாவது விபூதியில் எனக்கு  ஒரு இடம் கொடுத்து
                   விடு.  அதுதான் “பூலோக வைகுந்தம்” : அந்த  இடத்தில் 
                  இருந்துகொண்டு அரங்கனைப்  பற்றி பாடிக்கொண்டு  காலத்தை
                  ஒட்டுகிறேன்.
பெருமான்: ஆஹா!  நல்ல காரியம் செய்தீர்!   இப்போதே ஸ்ரீரங்கத்தை
                   மூன்றாவது  விபுதி என்று உலகத்துக்கு அறிவித்து
                    விடுவோம்.
இப்படியாக ஸ்ரீரங்கம் மூன்றாவது விபுதியானது.
எப்படி ஸ்ரீரங்கமும் வைகுந்தமும் ஒன்றாகும்.. ஆகும்!
“காவேரி விரஜா சேயம் வைகுந்தம் ரெங்க மந்திரம்
ஸ: வாசுதேவோ ரங்கேசய: ப்ரத்யட்சம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மகாத்புதம்
ஸீ ரங்கசாயீ பகவான் ப்ரண வார்த்த ப்ரகாசக:”
           அதைத்தான் மேலே உள்ள பாடல் விளக்குகிறது. லீலா விபுதி அடைவதற்கு முன்னால் விரஜா நதியைக் கடக்க வேண்டுமாம். அதற்குச் சமமானது இங்குள்ள உபயகாவேரின்னு சொல்ற காவேரி மற்றும் கொள்ளிடம். அவைதான் எல்லைகோடுகள்.
வைகுந்தம் ரெங்க மந்திரம் என்பது வைகுந்தத்தைக் குறிக்கிறது.அதற்கு சமமாக ஏழு பிரகாரங்கள் கொண்ட “கோயில்" என்று குறிப்பிடப்படும் ஸ்ரீரங்கம்.ஸ: வாசுதேவ: ரெங்கசய  என்ற வைகுண்ட வாசன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் தான், வேறுயாருமல்ல.
ப்ரத்யக்ஷம் பரமம் பதம் என்ற வார்த்தை ரங்கநாதன் தான் வைகுந்தவாசன் என்று குறிக்கிறது.
தொடரும்: பகுதி  3ல் 
ஸ்ரீ உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டது

கருத்துகள் இல்லை: